நீங்களே இப்படி பண்ணலாமா.. போட்டிக்கு நடுவே காவ்யா மாறன் எடுத்த முடிவு.. இத கவனிச்சீங்களா..

180 0

17 வது ஐபிஎல் சீசன் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்த நிலையில் இந்த போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக குவாலிஃபயர் 1-ல் இரு அணிகளும் மோதி இருந்த நிலையில் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி இருந்த கொல்கத்தா அணி 160 ரன்கள் என்ற இலக்கை 14 வது ஓவரிலேயே எட்டிப் பிடித்து சாதனை புரிந்திருந்தது. ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த கொல்கத்தா அணி, இந்த சீசனில் அதிக பலத்துடனும் திகழ்ந்ததால் அவர்கள் மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்வார்கள் என்று தான் பலரும் கணித்து வந்தனர். அது கடைசியில் நிஜமானதுடன் மட்டுமில்லாமல் இப்படி ஒரு இறுதிப் போட்டியாக இருக்கும் என்று கூட நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதுடன் மட்டுமில்லாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததால் கொல்கத்தா அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங்கிற்கு எதிராக ஹைதராபாத்தின் அதிரடி பேட்டிங் பதில் சொல்லும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருந்தது. ஆனால் குவாலிஃபயர் 1 போலத்தான் இந்த போட்டியும் கொல்கத்தா அணியின் கட்டுப்பாட்டில் இருக்க, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 100 ரன்களை கடக்கவே பெரும்பாடுபட்டது. 113 ரன்களில் ஆல் அவுட்டாக, இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி, 11 வது ஓவரிலேயே போட்டியை முடித்து 3 வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று பட்டையை கிளப்பி உள்ளது.ஹைதராபாத் இந்த அளவுக்கு எளிதாக தோல்வியடையும் என யாருமே எதிர்பார்க்காத ஒரு சூழலில், மறுபுறம் கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. இதனிடையே இந்த போட்டிக்கு நடுவே ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன் செய்த விஷயம் தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது அவர்கள் 6 ஓவர்களில் 60 ரன்கள் கடந்த சமயத்தில் காவ்யா மாறன் அனைவரிடமும் டாட்டா காட்டிவிட்டு எங்கோ கிளம்பி சென்றதாக செய்தி வெளியானது. பல போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றாலும் சோகத்துடன் இருக்கும் காவ்யா மாறன், வெற்றி பெறும் போதெல்லாம் துள்ளி குதித்து உற்சாகமாக கொண்டாடியும் வந்தார். அப்படி இருக்கும்போது போட்டியில் தோல்வி அடைய போகிறோம் என்பதை அறிந்து நடுவே இப்படி கிளம்பலாமா என்ற கேள்விகளும் எழுந்து இருந்தது. ஆனால், போட்டி முடியும் போது அங்கேயே இருந்ததாக தெரியும் சூழலில், ஹைதராபாத் அணி தோல்வி அடைந்த பின்னர் கண்ணீர் விட்டு கலங்கவும் செய்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Related Post

ஹாரி புரூக் அபார சதம்: பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது சன் ரைசர்ஸ் ஐதராபாத்…

Posted by - April 15, 2023 0
ஹாரி புரூக் 55 பந்துகளில் சதமடித்து, இந்த ஐபிஎல் தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில்,…

IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது

Posted by - March 23, 2024 0
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள…

பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்

Posted by - January 30, 2023 0
லக்னோ: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமாக இருந்த போதும், பாண்ட்யா கூறிய ஒரே ஒரு வார்த்தை வெற்றி பெற வைத்ததாக…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு… தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

Posted by - April 25, 2023 0
முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *