கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட கோரமான நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள மக்களின் நிவாரண பணிக்காக பிரபல தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அம்மாநிலத்தின் பல பகுதியில் வெள்ளத்தால் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வயநாடு அருகே நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் பலர் வீடுகளை இழந்தும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இந்த துயர சம்பவத்தில் சிக்கி தவித்து வரும் மக்களுக்காக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து மாநில அரசுகள் , அரசியல் கட்சிகள் , திரைப்பட நடிகர்கள் என பலரும் கேரள மக்களுக்காக நிதியுதவி செய்து வருகின்றனர் .
இந்நிலையில் வயநாடு உள்பட கேரளாவின் பல பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து கேரள முதலமைச்சரின் பொது நிவாரண தென்னிந்திய நடிகை ராஷ்மிகா மந்தனா கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .