செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி…

109 0

Independence Day | நாட்டின் 78வது சுதந்திர தினத்தையொட்டி ல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.

நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், பிரதமர் மோடி தொடர்ந்து 11வது முறையாக தேசிய கொடி ஏற்றினார். தேசிய கொடியை ஏற்றிய பிரதமர், முப்படை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டை வண்ண விளக்கொளியில் மின்னியது. இதேபோன்று, பழைய மற்றும் புதிய நாடாளுமன்ற வளாகங்கள், குதுப்மினார் உள்ளிட்ட வரலாற்று தொடர்புடைய இடங்களும் மூவர்ண விளக்கொளியில் அழகூட்டப்பட்டு கண்களுக்கு விருந்து படைத்தன.சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள இந்தியா கேட், குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் உலக பாரம்பரிய சின்னமான ஹூமாயூன் சமாதி உள்ளிட்ட பகுதிகள் மூவர்ண விளக்கொளியில் ஜொலித்தன. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மற்றும் மாநகராட்சி கட்டடங்களும் மூவர்ண விளக்கொளியில் கண்களுக்கு விருந்து படைத்தன.பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் எல்லை பாதுகாப்பு படை அலுவலகமும் மூவர்ணத்தில் ஒளிர்ந்தது. மத்திய பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலகம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது

Related Post

ஆந்திராவில் தவறான ஊசி போட்டதால் 100-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பலி

Posted by - June 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம் பல நாடு மாவட்டம் முப்பல்லா கிராமத்தில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளன. இந்த நாய்களால் கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதற்கு…

வெப்ப அலை எச்சரிக்கை: உரிய முன்னேற்பாடுகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்

Posted by - April 12, 2024 0
புதுடெல்லி: ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் வழக்கத்தைவிட மிக அதிகமாக வெப்ப அலை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் பிரதமர்…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

கொட்டும் மழையில் ஐந்தரை வயது சிறுமிக்காக அவசர அவசரமாக வந்திறங்கிய இதயம்… நெகிழ வைத்த ஊழியர்கள்!

Posted by - April 24, 2023 0
திருமலை திருப்பதி தேவஸ்தான குழந்தைகள் இதய நல மருத்துவமனையின் மூன்றாவது இதயமாற்று அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக நடந்துள்ளது. திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழந்தைகள் இதய…

மத்திய பட்ஜெட் சிறு, குறு தொழில்களுக்கு எப்படி? : என்ன சொல்கிறார்கள் தொழிலாளர்கள்?

Posted by - February 1, 2025 0
 பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில் வெளியாகியிருக்கும் அறிவிப்புகள் சிறு குறு தொழிலார்களுக்கு எந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *