நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது.#TirupatiLaddus #TirupatiControversy
நெய் நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்று, சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது. நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3 ஆசிட் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. தற்போது பெரும்பாலானோர் கடைகளில் கிடைக்கும் நெய்யை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். இந்த நெய் சுத்தமானதா அல்லது கலப்படம் செய்ததா? என்ற சந்தேகம் நாம் அனைவருக்கும் இருக்கும். இதனை தெரிந்து கொள்ள எளிமையான சோதனைகள் போதுமானது. அதுகுறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
உப்பு சோதனை : நமது அனைவரது சமையலறையில் உப்பு கண்டிப்பாக இருக்கும். இதில் ஒரு ஸ்பூன் உப்பு போதும் உங்கள் கையில் உள்ளது நல்ல நெய்யா? அல்லது போலியானதா என கண்டறிய… ஒரு கிண்ணத்தில் நீங்கள் சோதனை செய்து பார்க்க நினைக்கும் நெய்யை எடுத்து கொள்ளுங்கள். இதில் ஒரு சிட்டிகை அளவு ஹைட்ரோகுளோரிக் ஆசிட் மற்றும் ஒரு ஸ்பூன் உப்பு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை சுமார் 20 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பின்னர் இதில் சிவப்பு நிறம் மாறி இருந்தால் உங்கள் நெய் கலப்படம் என்றும் இல்லையென்றால் கலப்படம் இல்லாதது என்றும் கண்டறியலாம்.
தண்ணீர் சோதனை ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் வைத்திருக்கும் நெய்யில் இருந்து ஒரு சொட்டு எடுத்து உள்ளே விடுங்கள். நெய் தண்ணீரில் மிதந்தால் அது கலப்படமற்றது. மாறாக தண்ணீரில் கலந்தால் அது கலப்படம் செய்தது என தெரிந்து கொள்ளுங்கள். இதேபோல ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் சிறிதளவு நெய் சேர்த்து அப்படியே வைத்து விடுங்கள். சிறிது நேரத்திற்கு பின்னர் தண்ணீரின் மீது ஒரு லேயர் படர்ந்து இருந்தால் கலப்படமானது என அறியலாம்.
உள்ளங்கை சோதனை : ஒரு ஸ்பூன் நெய்யை எடுத்து உங்களது உள்ளங்கையில் ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் இரண்டு கையால் நன்கு தேய்த்து அதனை முகர்ந்து பாருங்கள். சுத்தமான நெய் என்றால் அதனை வாசனையே நன்கு தெரியும். அதேபோல நாம் நன்கு தேய்த்த பின்னர் நிறமற்றதாக இருந்தால் கலப்படமானது என அறியலாம்.
சுத்தமான நெய்யை வீட்டில் தயார் செய்வது எப்படி? ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு பாலை எடுத்து நன்கு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். ஆடை பிரிந்து வரும் வரை நன்கு காய வைத்து பின்பு ஆற வைக்க வேண்டும். இந்த பாலாடையை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொண்டே வாருங்கள். இதனை பிரிட்ஜில் வைத்தால் கெடாமல் இருக்கும். ஒரு வாரம் கழித்து நீங்கள் சேகரித்து வைத்துள்ள பாலாடை வெண்ணெய் போல மாறி இருக்கும். இதனை எடுத்து குளிர்ந்த தண்ணீர் சேர்த்து அரைத்தால் வெண்ணெய் நன்கு பிரிந்து வரும். இந்த வெண்ணெய்யை எடுத்து மிதமான சூட்டில் சூடு செய்தால் நெய் தயார். இதில் சீரகம் சேர்த்தால் வாசனை நன்றாக இருக்கும். இதன் நெய்யை ஒரு பாட்டிலில் வைத்து பயன்படுத்தினால் கெடாமல் இருக்கும்.