யாருக்கும் பாதுகாப்பில்லாத ஆட்சி.. திமுக அரசு மீது விஜய் தாக்குதல்

73 0

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் தீவிர அரசியலில் இறங்கியுள்ள நிலையில் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தும், அறிக்கைகள் வெளியிட்டும் வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் தனது முதல் மாநாட்டில் வாரிசு அரசியல் என்று ஆளுங்கட்சியான திமுகவை குற்றம்சாட்டியிருந்த நிலையில், இது பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அடுத்து இன்னும் சில நாட்களில் பாஜக தலைவர் அண்ணாமலை போல் திமுக ஊழல் பட்டியலை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று மருத்துவமனைக்குள் வைத்து ஒரு நபர் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் தன் எக்ஸ் தள பக்கத்தில் அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

’’தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் ’தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை தராததால், மருத்துவரை கத்தியால் குத்தியதாகவும், அதற்கு முன்னதாக சரியாக சிகிச்சை அளிக்காதது பற்றி மருத்துவரிடம் கேட்டதுடன், சுமான் விடமாட்டேன் என்று கூறியதாக பிடிபட்ட விக்னேஷ் என்பவர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளது’ குறிப்பிடத்தக்கது.

Related Post

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Posted by - March 22, 2024 0
மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் 19.04.2024 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், தேசிய…

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…

அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய் – திருமாவளவன் கருத்துக்கள்!”

Posted by - December 7, 2024 0
#vijay #tvk #bjp #vck #dmk #aiadmk #congress #thirumavalavan #thalapathyvijay  அம்பேத்கர் நூல் வெளியீட்டில் சமூக நீதி, அரசியல், மற்றும் மக்கள் சேவை குறித்து விஜய்…

அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

Posted by - November 13, 2024 0
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது.…

ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

Posted by - March 8, 2025 0
திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *