ஆக்ஸ் ஃபோர்ட் டிக்ஷரி ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று வரையறுக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு, அன்யோனியமாக இருக்கும் காலம்.
திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் செல்வது என்பது கட்டாயமாகிவிட்டது. இதற்காக நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த நாளே எங்கு ஹனிமூன் போகலாம் என்றெல்லாம் யோசித்து புக்கிங் போட்டுவிடுகிறார்கள். இதற்காக சில கன்சல்டிங் கம்பெனிகள் கூட இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா..? இதென்ன பிரமாதம்.. ஹனிமூன் ட்ரிப் லோன் கூட இருக்கிறது. இதற்கு பல வங்கிகள் வரிந்துகட்டிக் கொண்டு ஆஃபர்களை அள்ளி குவிக்கின்றனர். இப்படி பல வியாபாரங்கள் இந்த ஹனிமூனையொட்டி இன்று நடந்துக்கொண்டிருக்கிறது.
இத்தனையும் இருந்து ஹனிமூன் போகவில்லை எனில் என்ன சொல்றீங்க ஹனிமூன் போலையா என ஏதோ தெய்வ குத்தம் செய்ததுபோல் கேட்பார்கள். திருமணம் முடிந்து நண்பர்கள், உறவினர்களை சந்தித்தாலே ஹனிமூன் எங்க போனீங்க என்பதுதான் முதல் கேள்வி. இந்த கேள்விகளாலேயே பக்கத்தில் இருக்கும் ஏற்காடு, ஊட்டிக்காவது போய் ஒரு ஃபோட்டோ போட்டுவிட வேண்டும் என்கிற அளவுக்கு இருக்கும்.
இப்படி சந்தோஷத்திற்காக செல்லவேண்டிய ஹனிமூன் இன்று பிரஸ்டேஜ் இஷூவாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது. உண்மையில் ஹனிமூன் என்பது இதற்காகத்தான் உருவானதா..? ஹனிமூன் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன..? அதன் பெயர் காரணம்தான் என்ன..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
ஆக்ஸ் ஃபோர்ட் டிக்ஷரி ஹனிமூன் என்ற வார்த்தைக்கு திருமணமான முதல் மாதத்தை ஹனிமூன் என்று வரையறுக்கிறது. ஏனெனில் அந்த முதல் மாதம்தான் சண்டைகள் ஏதுமின்றி பரஸ்பர புரிதல்களோடு, அன்யோனியமாக இருக்கும் காலம். வெளிநாடுகளில் திருமணம் முடிந்து ஒரு மாதம் விடுமுறையில் இருப்பார்கள். அந்தசமயத்தில் அலுவலக வேலைகள் எதையும் செய்ய மாட்டார்கள். அலுவலகமும் அவர்களை தொடர்புகொள்ளாது. எனவே அதை அவர்கள் ஹனிமூன் காலம் என்று மகிழ்ச்சியோடு அனுபவிக்கின்றனர்.
இந்த ஹனிமூன் காலம் என்பது திருமணத்திற்கு மட்டுமல்ல. புது வேலையில் சேருகிறீர்கள் என்றாலும் முதல் 3 மாதங்களை ஹனிமூன் பீரியட் என்றே கார்பரேட் கலாச்சாரத்தில் அழைக்கிறார்கள். மொத்தத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு நாம் மகிழ்ச்சியாக இருந்தாலே ஹனிமூன் பீரியட்தான். சரி இந்த ஹனிமூன் காலம் என்பது எப்படி தொடங்கப்பட்டது..?
ஹனிமூன் என்னும் வார்த்தையை முதன்முதலில் ஜெர்மனியில்தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கலாச்சாரத்தை உருவாக்கியதில் பாபிலோனிய மக்களையே சேரும்.ஹனிமூன் முதன்முதலில் பாபிலோனிய மக்களின் கலாச்சாரமாக வழிமொழியப்பட்டது. 5-ஆம் நூற்றாண்டில் பாபிலோனிய மக்கள் திருமணத்தின்போது மணமகளின் தந்தை பெண்ணின் மகிழ்ச்சிக்காக மீட் (mead) என்னும் பானம் கொடுப்பார்கள். அது தேன் மற்றும் தண்ணீர் கலந்து பதப்படுத்தி புளிக்க வைப்பார்கள். இதை மகளுக்கான பெண் வீட்டார் செய்து கொடுப்பார்கள். அது ஒருவகையான மதுவாகும். அந்த பானத்தை திருமணமான ஒரு மாதம் முழுவதும் கொடுப்பது வழக்கம். அதுமட்டுமன்றி பாபிலோனர்களின் காலண்டர் கணக்கிடும் முறை நிலவின் சுழற்சி முறையை அடிப்படையாகக் கொண்டது. அதை வைத்துதான் நாள், காலத்தை குறிப்பிடுகிறார்கள். அப்படி கணக்கு வைத்து கொடுக்கும் மாதத்தைதான் honey month என்று அழைப்பார்கள். பின் அது மறுவி ஹனிமூன் என்றாகிவிட்டது.மற்றொரு பெயர் காரணம் ஜூன் மாதத்தில்தான் முழு நிலவு தோன்றும். அதேபோல் திருமணங்கள் அதிகமாக நிச்சயிக்கப்படும் மாதமும் ஜூன் மாதம்தான். அதேநேரம் தேன் அறுவடை அதிகமாக செய்யப்படுவதும் ஜூன் மாதம்தான்.அடுத்ததாக முன்னோர்கள் காலத்தில் மணமகன் மணமகளை கடத்திக்கொண்டு போய்விடுவார்கள். பின் அங்கு மனைவிக்கு 30 நாட்களுக்கும் மீட் எனப்படும் பானத்தை கொடுப்பாராம். பின் இருவரும் மகிழ்சியாக 30 நாட்களை கழிப்பார்களாம். இந்தசமயத்தில் அவர்கள் சீக்கிரமாக கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்குமாம்.பின் 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்கள் புதிதாக திருமணமான தம்பதிகள் சொந்தங்கள், நண்பர்களை சந்தித்து உறவாட அந்த ஒரு மாத காலத்தை பயன்படுத்துக்கொள்வார்கள். இதற்காக ஒன்றாக பயணம் செல்வார்கள். இதை ஹனிமூன் காலம் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.