#tamilcinema #tamil #kollywood #tamilactress #thalapathy #tamilmemes #tamilsongs #tamilstatus #love #tamilbgm #tamilsong #vijay #trending #tamillyrics #kollywoodcinema #tamilmusic #tamilmovie #thala #dhanush #tamilnadu #tamilsonglyrics #tamillovestatus #chennai #tamillovesong #vijaytv #kerala #tamilcomedy #thalapathyvijay #pixeltv #pixelmedia
சென்னை: நடிகர் சிவா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள சூது கவ்வும் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டில் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் இந்தப் படத்தின்முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் சூது கவ்வும் 2 என உருவாகியுள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மிர்ச்சி சிவாவுடன் படத்தில் வாகை சந்திரசேகர், எம்எஸ் பாஸ்கர், ஹரீதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.சூது கவ்வும் படம்: நடிகர் விஜய் சேதுபதி, அசோக் செல்வன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2013ம் ஆண்டில் வெளியானது சூது கவ்வும். இந்தப் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விஜய் சேதுபதி கேரியர் பெஸ்ட் படமாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. படத்தில் மிர்ச்சி சிவா, எம்எஸ் பாஸ்கர், கருணாஸ், வாகை சந்திரசேகர், ஹரீதா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். வரும் 13ம் தேதி ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.சூது கவ்வும் 2 படம்: அறிமுக இயக்குநர் எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தை திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சிவி குமார் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது இதன் இரண்டாவது பாகம். கடந்த இரு தினங்களுக்கு முன்பு இநத்ப் படத்தின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பாகத்தில் ஷாலுவின் மரணத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கைகளில் சிவா ஈடுபடுவதாக இந்த ட்ரெயிலரில் காட்டப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் நலன் குமாரசாமி, பா ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டவர்களை பார்த்தால் தனக்கு பயம் என்று கூறியுள்ளார்.கழட்டுவதற்கு ஒன்றும் இல்லை: இந்தப் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய நலன் குமாரசாமி இரண்டாவது பாகத்தை பார்த்து திட்டாமல் இருந்தாலே தான் வெற்றி பெற்றுவிட்டதாக நினைப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். திரில்லராக ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் காமெடியையும் சிறப்பாக இணைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தன்னுடைய ரீ என்ட்ரிக்காக முயற்சித்துவரும் சிவாவிற்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் மிர்ச்சி சிவா, சூது கவ்வும் 2 படம் ஒரு கல்ட் படம் என்றும் ஆனால் படத்தில் கழட்டுவதற்கு எதுவும் கிடையாது என்று தனக்கேயுரிய காமெடி சென்சுடன் பேசினார்.,பிரகாசமான காமெடி படம்: தொடர்ந்து பேசிய அவர் இந்தப் படம் டார்க் ஹுமர் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாகவும் ஆனால் லைட் மாதிரி பிரகாசமான காமெடி படமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படத்தை திரையரங்குகளில் சென்று என்ஜாய் செய்து பார்க்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டார். படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஹரி எஸ்ஆர் இசைத்துள்ள நிலையில், படத்தின் ட்ரெயிலரில் அவரது இசை சிறப்பாக வெளிப்பட்டது. நீண்ட காலங்களாக உருவாகிவந்த இநத்ப் படம் முதல் பாகத்தை போலவே ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கலாம்.