இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன் அறிக்கையை (credit report) அணுகும் போது வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதன் பொருள் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோர் விசாரணை (CIBIL score) ஏற்படும் போதெல்லாம், எஸ்எம்எஸ் (SMS) அல்லது ஈமெயில் (email) மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
1. கோரிக்கையை நிராகரிப்பதற்கான காரணத்தைக் குறிப்பிடும் விதி: வங்கிகள் மற்றும் NBFC-கள் தற்போது வாடிக்கையாளர்களின் கடன் கோரிக்கை (credit request) ஏன் நிராகரிக்கப்பட்டது என்பதை விளக்க வேண்டும். இந்த தெளிவு வாடிக்கையாளர்கள் தங்கள் கடன் தகுதியை பாதிக்கும் காரணிகளைப் புரிந்துகொள்ள உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு உதவ, RBI இந்த நிதி நிறுவனங்களுக்கு கடன் கோரிக்கை நிராகரிப்புகளுக்கான காரணங்களின் விரிவான பட்டியலை (list of the reasons for rejecting the request) அனைத்து கடன் தொடர்பான நிறுவனங்களுக்கும் தொகுத்து வழங்க உத்தரவிட்டுள்ளது.
2. வருடத்திற்கு ஒருமுறை வாடிக்கையாளர்களின் முழு கடன் அறிக்கையை இலவசமாக பெரும் விதி: வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை அவர்களுடைய முழுமையான கடன் அறிக்கையை இலவசமாகப் பெற (free full credit report) உரிமை வழங்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் வருடத்திற்கு ஒரு முறை தங்கள் முழு கடன் மதிப்பெண்ணையும் (CIBIL score),வரலாற்றையும் (credit score and history) எளிதாக அணுக அனுமதிக்கும் வகையில், வங்கிகள் மற்றும் NBFC-களின் வலைத்தளத்தில் ஒரு லிங்க்-கை வழங்க கடன் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முயற்சி, நிதி நிலைமையை சிறப்பாக நிர்வகிக்க உதவும்.
3. புகாரளிக்கும் முன் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டியது கட்டாய விதி: வாடிக்கையாளர் பாதுகாப்புக்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, RBI கடன் பணியகங்களுக்கு ஒரு சாத்தியமான தவறான விஷயத்தை அறிவிப்பதற்கு முன்பு, வாடிக்கையாளர்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கப்பட வேண்டும் (inform the customer before reporting the default) என்று உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தவறு ஏற்படுவதற்கு முந்தைய அறிவிப்பு SMS அல்லது ஈமெயில் மூலம் தொடர்பு கொடுக்கப்பட வேண்டும். இதனால் வாடிக்கையாளர்கள் நிலைமையை சரிசெய்ய வாய்ப்பு கிடைக்கும்.
4. தினசரி 100 ரூபாய் அபராத விதி: வாடிக்கையாளரின் கடன் தகவல் பற்றிய புகார் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், கடன் தகவல் நிறுவனம் சிக்கல் சரி செய்யப்படும் வரை தினமும் ரூ. 100 அபராதம் செலுத்த வேண்டும் (pay a fine of Rs 100 per day). RBI பிரச்சினை தீர்க்கும் செயல்முறைக்கான குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்கள் எந்தவொரு புகாரையும் கடன் பணியகத்திற்கு தெரிவிக்க 21 நாட்கள் உள்ளன. அதே சமயம் பணியகம் பிரச்சினையைத் தீர்க்க கூடுதலாக ஒன்பது நாட்கள் உள்ளன.
RBI-யின் இந்த நடவடிக்கைகள் தொடர் கடன் அறிக்கையின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பை மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அதிக பாதுகாப்பு மற்றும் தெளிவைக் கொடுக்கிறது. இந்த விதிகளுடன், தனிநபர்கள் தங்கள் கடன் தகவலை சிறப்பாக அணுக முடியும், கடன் நிராகரிப்புகளுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.