சட்டசபையில் சீனியர் அமைச்சர்கள் வரிசைக்கு வரும் உதயநிதி ஸ்டாலின்!

135 0

உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பதிவியேற்றார். எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில் உதயநிதி அமைச்சராக பதவியேற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உதயநிதி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மட்டுமல்லாது, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகளுக்கும் பொறுப்பேற்றுள்ளார்.

இந்த நிலையில் 35 பேர் கொண்ட அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலினுக்கு 10வது இடம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 2 வரிசைகள் கொண்ட அமைச்சரவையில் முன் வரிசையில் இடம் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 21வது இடமும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு 23வது இடமும், இந்துசமயம் மற்றும் அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 26வது இடமும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழிக்கு 30வது இடமும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த ராமதாஸ்..!

Posted by - April 10, 2025 0
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சில முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை உள்ளது – மருத்துவர் ராமதாஸ் விழுப்புரம்: பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு…

அண்ணாமலை – எல்.முருகன் சாலை மறியல்.. நீலகிரியில் பரபரப்பு

Posted by - March 25, 2024 0
நீலகிரியில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்காக பெரும் எண்ணிக்கையிலான பாஜகவினருடன் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வேட்பாளர் எல்.முருகன் உள்ளிட்டோர் வருகை தந்தனர். நீலகிரி மக்களவைத் தொகுதியில்…

ஒருவழியாக..! முதல்முறையாக ”திமுக” பெயரை சொன்ன விஜய் – ”வீட்டிற்கு அனுப்ப உறுதி”

Posted by - March 8, 2025 0
திமுக தலைமையிலான அரசை 2026ல் மாற்றுவோம் என, மகளிர் தின வாழ்த்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார், சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி தமிழக…

நீ சரியான ஆளா இருந்தா சொல்லிப் பாருடா! உதயநிதியை ஒருமையில் பேசிய அண்ணாமலை

Posted by - February 20, 2025 0
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில…

“எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல” நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!

Posted by - March 3, 2025 0
கச்சத்தீவு விவகாரம், தமிழ்நாடு மீன்பிடி சட்டத்திருத்தம் என திமுக-விற்கு எதிரான கருத்துக்களை நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *