ஏற்கனவே ஓடிடி (OTT) தளங்களின் எண்ணிக்கையும், அவைகளின் சந்தாதார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. போகிற போக்கை பார்த்தால் கேபிள் டிவி (Cable TV) என்கிற ஒரு சேவை இல்லாமல் போயிவிடும் என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நிலைப்பாட்டில் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ஒரு தரமான வேலையை பார்த்துள்ளது.வோடபோன் ஐடியா நிறுவனமானது அதன் விஐ மூவீஸ் மற்றும் டிவி (Vi Movies and TV) சேவையில் மேலுமொரு பிரபலமான ஓடிடி இயங்குதளத்தை சேர்த்துள்ளது. அது லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஓடிடி தளமாகும். எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் சேர்க்கப்பட்டுள்ள இந்த தளத்தின்கீழ் பல பிரபலமான திரைப்படங்கள், பிரீமியம் ஒரிஜினல் மற்றும் வெப் சீரீஸ்களை பார்க்க முடியும்.
லயன்ஸ்கேட் பிளே ஓடிடி தளத்தின் இணைப்பின் மூலம், தற்போது விஐ பயனர்களால் விஐ மூவீஸ் மற்றும் டிவி பிரீமியமின் கீழ் 16 ஓடிடி இயங்குதளங்களான (16 OTT Platforms) இலவச அணுகல்களை பெற முடியும். இந்நிறுவனம் கடந்த அக்டோபர் 2024இல் சன் நெக்ஸ்ட் (SunNXT) உடன் கூட்டு சேர்ந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. 4 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் 2 போஸ்ட்பெயிட் திட்டங்கள் என விஐ மூவீஸ் மற்றும் டிவி பிரீமியமின் கீழ் கிடைக்கும் ஓடிடி சந்தாக்களை அணுக மொத்தம் 6 திட்டங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதென்ன திட்டங்கள்? அவைகளின் விலை நிர்ணயம் என்ன? ஓடிடி தளங்களுக்கான அணுகல்களோடு சேர்த்து வேறு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்: 01. விஐ ரூ.154 டேட்டா பேக்: இது 1 மாத வேலிடிட்டியுடன் 2ஜிபி டேட்டாவை உள்ளடக்கிய விஐ மூவீஸ் அன்ட் டிவி லைட் பிளான் ஆகும். இதன் கீழ் ஜீ5, சோனிலைவ், லயன்ஸ்கேட் பிளே, ஃபேன்கோட், சன்நெக்ஸ்ட், அட்ராங்கி, கிளிக், சௌபால், மனோரமா மேக்ஸ், நம்மபிளிக்ஸ், பிளேபிளிக்ஸ், டிஸ்ட்ரோடிவி, ஷீமாரூ மீ, யப்டிவி, நெக்ஸ்ஜிடிவி மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் ஆகிய 16 ஓடிடி இயங்குதளங்களான அணுகல்கள் கிடைக்கும்.02. விஐ ரூ.175 டேட்டா பேக்: இது 10ஜிபி டேட்டா, 16 ஓடிடி தளங்கள், 350+ டிவி சேனல்களை உள்ளடக்கிய விஐ மூவீஸ் அன்ட் டிவி சூப்பர் பிளான் ஆகும். இதன்கீழ் ரூ.154 பேக்கின் கீழ் கிடைக்கும் 16 ஓடிடி தளங்களும் அணுக கிடைக்கும். இந்த பேக்கிற்கு சர்வீஸ் வேலிடிட்டி கிடையாது. இதை ரீசார்ஜ் செய்ய உங்களிடம் ஏற்கனவே ஆக்டிவ் ஆக உள்ள திட்டம் தேவை. 03. விஐ ரூ.202 டேட்டா பேக்: இது 1 மாத வேலிடிட்டி, 5ஜிபி டேட்டா, 14 ஓடிடி தளங்கள், 350+ டிவி சேனல்களை உள்ளடக்கிய விஐ மூவீஸ் அன்ட் டிவி ப்ரோ பிளான் ஆகும். இதன்கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், சோனி லைவ், லயன்ஸ்கேட் பிளே, ஃபேன்கோட், க்ளிக், சௌபால், மனோரமா மேக்ஸ், நம்மபிளிக்ஸ், பிளேபிளிக்ஸ், டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூ மீ, யப்டிவி, நெக்ஸ்ஜிடிவி மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் ஆகியவைகள் கிடைக்கும். 04. விஐ ரூ.248 டேட்டா பேக்: இது 1 மாத வேலிடிட்டி, 6ஜிபி டேட்டா, 17 ஓடிடி தளங்கள், 350+ டிவி சேனல்களை உள்ளடக்கிய விஐ மூவீஸ் அன்ட் டிவி பிளஸ் பிளான் ஆகும். இதன்கீழ் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜீ5, சோனிலைவ், லயன்ஸ்கேட் பிளே, சன்நெக்ஸ்ட், ஃபேன்கோட், அட்ராங்கி, க்ளிக், சௌபால், மனோரமா மேக்ஸ், நம்மபிளிக்ஸ், பிளேபிளிக்ஸ், டிஸ்ட்ரோ டிவி, ஷீமாரூ மீ, யப்டிவி, நெக்ஸ்ஜிடிவி மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் ஆகியவைகள் கிடைக்கும்.போஸ்ட்பெய்டு பேக்குகளை பொறுத்தவரை விஐ ரூ.199 ப்ரோ பேக் மற்றும் விஐ ரூ.248 பிளஸ் பேக் உள்ளன. ப்ரோ பேக்கின் கீழ் 14 ஓடிடி இயங்குதளங்களுக்கு 1 மாத கால இலவச சந்தா கிடைக்கும். இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலைவ் மற்றும் லயன்ஸ்கேட் பிளே அடங்கும். பிளஸ் பேக்கின் கீழ் 17 ஓடிடி இயங்குதளங்களுக்கு 1 மாத கால இலவச சந்தா கிடைக்கும். இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சன் நெக்ஸ்ட், சோனிலைவ் மற்றும் லயன்ஸ்கேட் பிளே ஆகியவைகள் அடங்கும்.
