விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாது என கூறிய இயக்குநர்.. காரணம் என்ன தெரியுமா

24 0

விஜய்யின் கடைசி படம்

தளபதி விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார். இதனால் சினிமா வாழ்க்கையில் இருந்து வெளியேறப்போவதாகவும் அறிவித்துவிட்டார்.

தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என அவர் கூறியுள்ள நிலையில், அப்படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் துவங்கிய நேரத்தில் இருந்தே, இது தெலுங்கில் வெளிவந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் தான் என கூறப்பட்டது.

சமீபத்தில் பகவந் கேசரி படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியை, தளபதி 69ல் படமாகியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், விஜய்யின் கடைசி படம் ரீமேக்-ஆ இல்லையா என்பது குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய், பகவந் கேசரி திரைப்படம் 5 முறை பார்த்தாராம். அதன்பின் அப்படத்தின் இயக்குநரான அனில் ரவிபுடி-யை அழைத்து தன்னுடைய கடைசி படமாக அனில் ரவிபுடி படத்தை ரீமேக் செய்து இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால், ரீமேக் படத்தை இயக்க முடியாது என, விஜய்யின் கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் அனில் ரவிபுடி நிராகரித்துள்ளார். இதனை விடிவி கணேஷ் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

இதன்பின் பேசிய இயக்குநர் அனில் ரவிபுடி, “விஜய் சாரின் கடைசி படம் பகவந் கேசரியின் ரீமேக் என்பதற்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவரவில்லை. அதை இந்த இடத்தில் பேசுவது என்பதும் சரியில்லை. விஜய் சார் மீது மிகப்பெரிய மரியாதை எனக்கு இருக்கிறது. அப்படத்தை இயக்கமுடியாமல் போனதற்கு நேரம் தான் காரணம். கடைசி படம் குறித்து பேசியது வேறு, அந்த நடந்தது வேறு, தளபதி 69க்கு என்னுடைய வாழ்த்துக்கள்.” என கூறினார்.

Related Post

சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - July 31, 2023 0
மாவீரன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

Posted by - March 2, 2024 0
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019…

2026-யில் புதிய கட்சி – நடிகர் விஷால் அறிவிப்பு!

Posted by - April 15, 2024 0
சென்னையில் வடபழனியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் பங்கேற்றார். அதில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் எனக் கூறினார். இதுகுறித்து பேசிய அவர்,…

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

Posted by - August 30, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.…

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

Posted by - October 30, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *