இனி நோக்கியா ஆண்ட்ராய்டு ஃபோன்களை வாங்க முடியாதாம்.. ஏன் தெரியுமா?

26 0

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

இந்தியாவில் நோக்கியா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் ஃபோன் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறலாம். ஏனென்றால் நோக்கியா பிராண்ட் பெயரை அதன் ஸ்மார்ட் ஃபோன்களுக்குப் பயன்படுத்தும் உரிமையைப் பெற்ற நிறுவனமான HMD குளோபல், தற்போது அதன் சொந்த பிராண்டட் டிவைஸ்களை அறிமுகம் செய்வதில் முழு கவனம் செலுத்துகிறது.

நோக்கியா இந்த நிறுவனத்தின் லைன்அப்-ல் தொடர்ந்து ஒரு பகுதியாக இருக்கும், ஆனால் இனிமேல் இந்தியாவில் அதன் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஃபீச்சர் ஃபோன்ஸ்களை (features phones) நீங்கள் வாங்க நினைத்தால் மட்டுமே உங்களுக்கு நோக்கியா ஃபோன்கள் இனி கிடைக்கும். அதாவது 1990-களில் நோக்கியாவின் மிக பெரிய வெற்றிகளைப் போன்ற குறைந்த விலை ஃபீச்சர் போன்களுக்கு மட்டுமே HMD இப்போது நோக்கியாவின் பிராண்ட் பெயரைப் பயன்படுத்துவதாக தெரிகிறது. இந்திய மார்க்கெட்டிற்கான HMD வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்த போது அதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களும் HMD பெயர் தாங்கி கொண்டிருப்பவை என்பதை கவனித்தோம்.அதே நேரம் HMD வெப்சைட்டில் நோக்கியா ஸ்மார்ட் ஃபோன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன, ஆனால் நீங்கள் ப்ராடக்ட் பேஜை திறக்கும் போது, ​​அது விற்பனை நிறுத்தப்பட்டதை குறிக்கும் வகையில் discontinued என காட்டுகிறது. 2023-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நோக்கியா XR21 உட்பட நோக்கியா பிராண்டட் போன்களை HMD வெபிசிட்ம் “இனி கிடைக்காது” என்று பட்டியலிட்டு உள்ளது. HMD தனது சொந்த தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்த வெப்சைட்டை மறுசீரமைத்துள்ளதை இந்நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

Related Post

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

கள்ளக்காதலனுக்கு மனைவியை திருமணம் செய்து வைத்து ஆசி வழங்கிய கணவன்

Posted by - July 8, 2023 0
பீகார் மாநிலம் நவாடா பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவருடைய கணவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில்…

ஆந்திரா ரெயில் விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு: உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Posted by - October 30, 2023 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு ஒரு பயணிகள் ரெயில் சென்றது. அந்த ரெயில் விஜயநகரம் மாவட்டத்தில் அலமந்தா- கன்கடப்பள்ளி இடையில் சிக்னலுக்காக காத்து…

பெரும் விபத்து தவிர்ப்பு: கொல்லம்-சென்னை ரெயிலில் அடிச்சட்டத்தில் விரிசலுக்கு காரணம் என்ன? அதிகாரிகள் ஆய்வு

Posted by - June 5, 2023 0
செங்கோட்டை: கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது. இந்த…

எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி லாபம்: பெட்ரோல், டீசல் விலையை குறைப்பார்களா?

Posted by - July 27, 2023 0
மும்பை: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஆனாலும் இந்திய எண்ணை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமலேயே உள்ளன. இந்நிலையில் எண்ணை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *