ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் திமுக வேட்பாளர் மற்றும் நாதக வேட்பாளர் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளான இன்று முக்கிய கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், திமுக 125 இடங்களிலும் காங்கிரஸ் 18 இடங்களிலும் வெற்றி பெற்றது. குறிப்பாக, ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக, உடல்நலக்குறைவால் அவர் திடீரென காலமானார்.இதனை தொடர்ந்து 2023ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில், அவரது தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் எதிர்பாராத விதமாக உடல்நலக் குறைவு ஏற்ப்பட்டு கடந்த ஆண்டு இறுதியில் அவரும் காலமானார். இதனால் 5 ஆண்டுகளுக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இரண்டாவது முறையாக, இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.
விலகிய பாஜக, அதிமுக:
இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவிக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். என்று தெரிவித்தார். இதனால் இந்த தேர்தலில் பிரதான கட்சியான திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகிறது.
திமுக போட்டி:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் போட்டியிடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திமுக போட்டியிட காங்கிரஸ் விட்டுக்கொடுத்தது. திமுக சார்பில் திரு. வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்) என்று திமுக அறிவித்திருந்தது.
வேப்மனு தாக்கல்:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கியது, ஆனால், பொங்கல் அரசு விடுமுறை அனைத்தையும் கருத்தில் கொண்டால், வெறும் 3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம் இருந்த நிலையில் இன்று வேப்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
கடைசி நாளான இன்று திமுக வேட்பாளரான வி.சி.சந்திரகுமாரும் நாதக சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமியும் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர். இது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட 9 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நாளை ( சனிக்கிழமை) பரீசிலனை செய்யப்படுகிறது. மேலும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜனவரி 20 ஆம் தேதி கடைசி நாளாகும், அதன் பின்னர் அன்று மாலை இறுதி வேட்பாளார் பட்டியல் வெளியிடப்படும்
இடைத்தேர்தலுக்கான முக்கிய தேதிகள்:
- வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் – 10.01.2025
- வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் – 17.01.2025
- வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் – 20.01.2025
- வாக்குப்பதிவு – 05.02.2025
- வாக்கு எண்ணிக்கை – 08.02.2025