15 வருஷமா எங்கே? திராவிட நாய்கள் நேரடியாக பதில் சொல்லாது: சீமான் பரபரப்பு பேச்சு

38 0

பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள்.

என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த மக்கள் பிரச்சினைக்கு பெரியாரியவாதிகள் முன் நின்றிருக்கிறார்கள். இதற்கு மட்டும் ஏன் வருகிறார்கள். 60 ஆண்டுகளாக நீங்கள் பெரியாரை வைத்துக்கொண்டு நீங்கள் காட்டும் படம் தேவையா?

தமிழகத்தின் 234 தொகுதிகளும் என் தொகுதி. இது என் நாடு. உண்மையான கம்யூனிசம், பெண்கள் உரிமை எங்களிடம்தான் உள்ளது. நீங்கள் வெறும் வெற்றுப்பேச்சு.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த அரசுக்கு துணிவு உள்ளதா? சமூக நீதி என்று பேசுகிறார்கள். ஜமுக்காள நீதி கூட கிடையாது. சாதி வாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்தலாம் என்று உச்சநீதிமன்றமே சொல்லியுள்ளது. கல்வியை பொதுப்பட்டியலில் கோரும் திமுக மத்திய அரசில் இருந்தபோது என்ன செய்தது?

பாஜக சாதிவாரி கணக்கு எடுக்காது என்பது நன்றாகவே தெரியும். அப்புறம் எதுக்கு நீங்கள் அவர்களிடம் மாற்றிவிடுகிறீர்கள்.

பெரியார் குறித்து நான் பேசியதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. வழக்கு போட்டுள்ளீர்கள். தேவைப்படும்போது நானே நீதிமன்றத்தில் காட்டுவேன்.

இதே விஷயத்தை பல பேர் பேசியுள்ளனர். நான் பேசும்போது மட்டும்தான் கோவம் வருகிறது. கோட்டையை முற்றுகையிடுவது தமிழர் மரபு. வீட்டை முற்றுகையிடுவது திராவிட மரபு. என் வீட்டை அவர்கள் எங்கு முற்றுகையிட்டார்கள்? பெரியாரை அதிகமாக விமர்சித்தது திமுகதான்.

நாங்கள் எதற்கும் ஆதாரம் இல்லாமல் பேசவில்லை. பிரபாகரனுடன் நான் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. 15 வருடமாக எங்கே போனார். என்னிடம் நேரடியாக சொல்ல சொல்லுங்கள்.  திராவிட நாய்கள் எதற்கும் நேரடியாக பதில் சொல்லாது.

நாங்களாக எதையும் பேசவில்லை. பெரியார் பேசியதைத்தான் சொல்கிறோம். தமிழ் மொழியை பாதுகாக்க போராடியவர்களை சிறுமை படுத்தியவர் பெரியார்.

என் பொம்மையைத்தான் திராவிட இயக்கத்தினரால் எரிக்க முடியும். திமுக, பெரியாரிய போராட்டக்காரர்களால் எனக்கு இலவசமாக விளம்பரம் கிடைத்துள்ளது.

பெரியாரியவாதிகள் வீட்டில் அம்பேத்கர் படம் இருக்கிறதா? பெரியார் பேசியது எழுதியது எல்லாமே தமிழர்களுக்கு எதிரானது.

தமிழ் சனியனை விட்டு ஒழியுக்கள் என்று பெரியார் பேசினார். அந்த சனியனை விட்டு ஒழியுங்கள் என்பது எங்கள் கொள்கை. தமிழ் தேசியம் திராவிடத்தை வீழ்த்தி மேலே வரும்போது தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்று சொல்லும்போது கோபம் வருமா வராதா?

கட்சத்தீவை கொடுப்பதில் என்ன ராஜதந்திரம் என்ன இருக்கிறது. மீனவர்களை சாவடிக்கிறது ராஜ தந்திரமா? வாக்கு கேட்கும்போது அண்ணன் செல்வபெருந்தகை இதை சொல்லி ஓட்டு கேட்பாரா? மொத்த பெரியாரிஸ்ட்டுகளும் மன்னிப்பு கேட்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.

Related Post

திண்டுக்கல்: குப்பையில் வீசப்பட்ட பெண் சிசுக்கள்; நாய்கள் குதறிய அவலம் – நடந்தது என்ன?!

Posted by - July 31, 2023 0
திண்டுக்கல், மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் அருகே மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், நேற்று காலையில் அந்தக் குப்பைத் தொட்டியை நாய்கள் சூழ்ந்து நின்று…

பாதியில் வெளிநடப்பு.. அவையில் சலசலப்பு.. கடந்தாண்டு ஆளுநர் உரையை மறக்க முடியுமா?

Posted by - February 12, 2024 0
தனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டதால், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பாகவே அவையில் இருந்து ஆளுநர் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் இடையே…

தமிழகத்தில் இன்று மிக கனமழை எச்சரிக்கை: 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Posted by - November 22, 2023 0
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில் இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய…

பைக்கில் சென்றபோது பெட்ரோல் ஊற்றி தீவைத்த காதலி – காதலன் உயிரிழப்பு..!!

Posted by - May 15, 2024 0
மயிலாடுதுறையில் காதலன் மேல் இருந்த கோபத்தால் தன் மீதும் காதலன் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் காதலன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

அரையாண்டு விடுமுறை : சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை – பள்ளி கல்வித்துறை அதிரடி

Posted by - December 24, 2022 0
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் மட்டும் வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என மாவட்ட முதன்மைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *