“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!

26 0

ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை.

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன் என நடிகை வினோதினி வைத்தியநாதன் தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச் சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரிய வைத்திருக்கிறது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என் செயலும் பணமும் எனது சொந்த வாழ்க்கைத் தரத்தை ஓரளவு முன்னேற்றுவதற்கும், நான் மேற்கொண்டுள்ள தெருவிலங்குகளின் (நாய், பூனை, ஒரு கோஷாலாவில் என் செலவில் வாழும் சில மாடுகள்) வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவதற்குமே சென்றிருக்கிறது. ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. ஆங்கிலத்தில் சொன்னால் Slacker. கடமைகளைத்தட்டிக்கழிக்கும் சோம்பேறி. மய்யத்தில் நான் செய்தது காம்சோர். இதை ஒத்துக்கொள்வதில் தவறில்லை என்றும் இந்த உண்மையை வெளிப்படுத்துவதன்மூலம் எனக்கு மிகப்பெரிய சுதந்திரம் கிடைக்கிறது என்றும் நம்புகிறேன்.

 

பலர் இங்கு, கட்சி நடக்கிறதா என்றெல்லாம் கேட்பார்கள். எப்பொழுதும் நான் சொல்வது – கட்சிக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிந்தியுங்கள். சிறு துளி கூட பெரு வெள்ளமாகும். அச்சிறு துளியைக்கூட நான் என் பல அலுவல்களுக்கு நடுவில்தான் செய்திருக்கிறேன். முழுமையாக அல்ல.

அமெரிக்க அரசியலில் ஒரு term பயன்பாட்டில் உள்ளது. Career Politician. முழுமையாக அரசியலில் மட்டுமே இருப்பவர்கள், அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள், அதிலிருந்தே சம்பாதிப்பவர்கள். ஆனால் அதை முறியடித்துத்தான் அத்தனை career politicianகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு Trump அதிபரானார். (அவர் அமெரிக்காவிற்கு சரியான தலைவரா இல்லையா என்பது வேறு விஷயம்). ஆனால் அங்குள்ள மக்களே உணர்ந்தது என்னவென்றால் – career politicianகளைவிட businessmanஆன Trump எல்லாவிதத்திலும் மக்களின் நலனுக்காக மக்கள் கஷ்டங்கள் தெரிந்து போராடுவார், இதைத்தான் அமெரிக்காவின் founding fathersஉம் விரும்பினர் என்று. ஆனால், அப்படி முழுநேர அரசியல் செய்யாமல் அவ்வரசியலிலிருந்து பொருள் ஈட்டாமல் இருக்க, மக்கள் பணத்தைச் சுருட்டாமல் இருக்க, சொந்தமாகப் பெரிய வணிக அல்லது பொருளாதாரப் பின்புலம் தேவை. அது என்னிடம் இல்லை.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளைத் துவக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல, வினோதினியும்தான்.

தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.

65 வயதிற்கு மேலும் தனது மூத்திரப்பையை கையில் ஏந்தி பகுத்தறிவு புகட்டிய அந்த தாத்தனைப்போல், இன்றும் எங்கள் மய்யத்தில் கொடி நட்டு, போஸ்டரடித்து, உறுப்பினர் சேர்த்து, ஒவ்வொரு தேர்தலின்போதும் அயராது களத்தில் இறங்கி வேலைசெய்யும் தொண்டனைப்போல், மக்கள் பிரச்சனை என்றால் களத்தில் குதிக்கும் ஒவ்வொரு கட்சியின் நிர்வாகிபோல் நானும் என் கணக்கைத் தொடங்கும் பொழுதுதான் அது அரசியல் அல்லாது, அறச் செயலாக மாறும்.

அதுவரை, சிந்தனையில் மட்டுமே. அச்சிந்தனையை மெருகேற்றிய நம்மவருக்கும் அவர்பின் நின்ற, நிற்கும் அனைவருக்கும் நன்றிகளும் அன்பும்.

தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடுவு நிலையிலிருந்தபடியே” எனத் தெரிவித்துள்ளார்.

Related Post

ஜோடிக்கப்பட்ட ஒன்று… ஆடியோ சர்ச்சை குறித்து பி.டி.ஆர் விளக்கம்

Posted by - April 23, 2023 0
ஆடியோ சர்ச்சை குறித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் உள்ளார். கருத்துகளை புள்ளிவிவரங்களுடன் துல்லியமாக பேசுவதன் மூலம் பெயர் பெற்றவர்.…

இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் என்னிடம் காட்டாதீர்கள் : குஷ்பு காட்டம்

Posted by - March 14, 2024 0
குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் நிலையில், இந்த பூச்சாண்டி வேலை எல்லாம் தன்னிடம் காட்ட வேண்டாம் என அவர்  வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பா.ஜ.க தேசிய செயற்குழு…

“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு

Posted by - December 2, 2024 0
10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாக அண்ணாமலை சாடல். தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு…

இரட்டை இலை சின்னம் யாருக்கு.? சிதறுமா வாக்குகள்.. திரும்பும் எம்.ஜி.ஆர். கால வரலாறு!?

Posted by - February 3, 2023 0
AIADMK : ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு தனி சின்னத்தில் போட்டியிட்டால் யாருக்கு லாபம்? அதிமுக வாக்குகள் சிதறுமா? இரட்டை இலை சின்னம் முடங்க தான் காரணமாக…

“பாஜகவில் சேருவதாக பொய் தகவல் பரப்புகின்றனர்!” – எஸ்.பி.வேலுமணி ஆவேசம்

Posted by - February 28, 2024 0
கோவை: அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜகவில் சேருவதாக பொய்தகவல் பரப்புகின்றனர். வெறும் 3 முதல் 4 சதவீத வாக்காளர்கள் உள்ள பாஜகவில், அதிமுகவினர் சேருவார்களா என்று அதிமுக முன்னாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *