பெரியாரை விமர்சித்து வரும் சீமானுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீமானை விளாசிய முதலமைச்சர் ஸ்டாலின்
வடசென்னையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பெரியார்-தான் எங்களின் தலைவர், தலைவர்களுக்கு எல்லாம் தலைவர் அவர்தான். மற்றவர்கள் பேசுவதை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. பெரியாரை மரியாதை குறைவாக பேசுபவர்களுக்கு எல்லாம் நான் மரியாதை தர தயாராக இல்லை” என தெரிவித்தார். கடந்த சில நாட்களாகவே நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தான், விமர்சிப்பவர்களுக்கு மரியாதை இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.