“அப்பா எல்லாம் வீண் விளம்பரம்” கோவை கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் அண்ணாமலை ஆவேசம்

37 0

பாலியல் குற்றங்களைத் தடுக்க ஒரு துரும்பைக் கூட அள்ளிப்போடாத மு.க.ஸ்டாலின் வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன் என்று நாடகம் போடுவதால் என்ன பலன்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பாலியல் குற்றங்கள் நடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் இணைந்து கூட்டுப்பாலியல்  வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

கூட்டுப்பாலியல் வன்கொடுமை:

கோவையில், 17 வயது சிறுமி, 7 மாணவர்களால் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெருகியிருக்கும் போதைப் பொருள்கள் புழக்கத்தால், இளைஞர்கள், விலங்கு மனப்பான்மைக்குச் சென்று கொண்டிருக்கின்றனர் என்பதைத்தான் சிறுமிகள் மீதான இது போன்ற கூட்டுப் பாலியல் வன்முறைகள் காட்டுகின்றன.

ஒன்றுமே செய்யவில்லை:

 

ஒரு நிர்பயாவுக்காக நாடே அதிர்ந்தது. ஆனால், தமிழகத்தில் தினம் தினம் சிறுமிகள், மாணவிகள், பெண் காவலர்கள், பெண் அரசு அதிகாரிகள் என, பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்கவோ, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யவோ, திமுக அரசு ஒரு துரும்பைக் கூட அசைக்கவில்லை.

வீண் விளம்பரத்திற்காக அப்பா, அண்ணன்:

குற்றவாளி திமுகவைச் சேர்ந்தவன் என்றால், அவனைக் காப்பாற்றுவதற்காகப் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே பழி சுமத்தி விட்டு, வீண் விளம்பரத்துக்காக அப்பா, அண்ணன் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன் என்பதை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் கூறுவாரா?

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களால் திமுக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள் திமுக அரசுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

திமுக அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வியூகம் வகுத்து வரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடுத்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு சதவீதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Post

“விரைவில் துணை முதலமைச்சராவார்”- உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சீமான்

Posted by - December 14, 2022 0
இது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில் துணை முதலமைச்சராக கூட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் விரைவில்…

மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர்.. முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

Posted by - March 11, 2024 0
நாட்டு மக்களுக்கு என்ன சொல்லப்போகிறார் பிரதமர் மோடி என்று எதிர்பார்ப்பு இன்று மாலை 5.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.…

எங்களுக்கு பின் கட்சியில் வந்தவர்கள் எல்லாம் எம்.பி, எம்.எல்.ஏ ஆகி விட்டனர் – ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேச்சு

Posted by - December 4, 2022 0
RS BHarathi | நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம் – ஆர்.எஸ்.பாரதி கட்சிக்கு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. திமுக vs நாதக.. விலகிய பாஜக, அதிமுக.. வேட்புமனுவுக்கு இன்றே கடைசி நாள்

Posted by - January 17, 2025 0
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல்  செய்ய இன்றே கடைசி நாள் திமுக வேட்பாளர் மற்றும் நாதக வேட்பாளர் வேட்புமனு இன்று தாக்கல் செய்ய உள்ளனர். ஈரோடு கிழக்கு…

அஜித் ரசிகர்களை கவர நினைக்கும் சீமான்.. விஜய்க்கு எதிராக போடும் திட்டம்

Posted by - November 13, 2024 0
விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய போது சீமான் அவருக்கு ஆதரவாக பல மேடைகளில் பேசுகிறார். ஒரு அண்ணன் தம்பி பாச வெளிப்பாடாக அவரது கருத்துக்கள் இருந்து வந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *