நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு? அண்ணாமலையிடம் திருப்பி கேட்ட தங்கம் தென்னரசு

21 0

இந்தியாவின் கடன் தொகை 55.87 லட்சம் கோடியில் இருந்து 181.74 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றால் நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? என அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும்.

கமிஷன் எவ்வளவு மு.க.ஸ்டாலின்?

கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை இன்று பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என்றீர்கள் அன்று. இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு மு.க.ஸ்டாலின்? என்று பதிவிட்டிருந்தார்.

நீங்க அடிச்ச கமிஷன் எவ்வளவு?

 

அவரது கேள்விக்கு தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,  2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?

நிதியை வாங்கித் தாருங்கள்:

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

போதாமை:

கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான  போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Post

“எனக்கு ரொம்ப வருத்தம்; மய்யத்தில் நான் காம்சோர்” – கமல் கட்சியில் விலகும் முக்கிய நடிகை!

Posted by - January 30, 2025 0
ஹிந்தியில் ஒரு வார்த்தை இருக்கிறது. அதை நான் சொல்லிப்பல பேரைத் திட்டியிருக்கிறேன். காம்சோர் என்பதுதான் அந்த வார்த்தை. மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுகிறேன்…

TVK கட்சி கொடிக்கு எதிராக கிளம்பிய பஞ்சாயத்து.. தேசிய கட்சி வைத்த செக், தளபதியின் ரியாக்சன் என்ன.?

Posted by - August 23, 2024 0
தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த கொடியை ஏற்றி வைத்து உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார் விஜய். சிவப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும்…

வேதனை தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!!

Posted by - October 29, 2024 0
விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வந்த த.வெ.க.வினர் சாலை விபத்தில் சிக்கி…

உறுதிமொழி எடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடி அறிமுகம் செய்த விஜய்..

Posted by - August 22, 2024 0
விஜய் இன்று ஆகஸ்ட் 22, காலை முதலே தமிழ் ரசிகர்கள் ஒரு விஷயத்திற்காக தான் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுஎன்ன, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். நடிகர்…

TAC TV விவகாரம்: “அன்று ஹாத்வே இன்று அரசு கேபிள்” – திமுக அரசு மீது BJP தலைவர் அண்ணாமலை சாடல்

Posted by - November 23, 2022 0
திரு,அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் இந்த இரண்டு நாள்கள் நமது மக்களுக்கு மீண்டும் 2006-2011 காலகட்ட கொடுங்கோல் குடும்ப ஆட்சியை நிச்சயமாக நினைவுபடுத்தியிருக்கும் தமிழ்நாடு முழுவதும் சுமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *