கலக்கிய ப்ராஸ்வெல்! சொதப்பிய வேகம், மிரட்டிய சுழல்! கோப்பையை வெல்ல டார்கெட் என்ன?

20 0

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்திய அணி மகுடம் சூடுவதற்கு நியூசிலாந்து அணி 252 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஒரு மாத காலமாக நடந்து வந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மகுடம் சூடப்போவது யார்? என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்கத்தில் தடுமாறிய நியூசிலாந்து:

இதையடுத்து, வில் யங் – ரவீந்திரா ஜோடி ஆட்டத்தைத் தொடர்ந்தது. ரவீந்திரா பவுண்டரியும், சிக்ஸரும் விளாசி அதிரடியாக ஆட வில் யங் சற்று தடுமாறினார். ரவீந்திரா அதிரடியால் ரன்ரேட் எகிறத் தொடங்கவும் கேப்டன் ரோகித்சர்மா சுழல் பந்துவீச்சு தாக்குதலைத் தொடங்கினர். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்தது.

வருண் சக்கரவர்த்தி வீசிய ஆட்டத்தின் 8வது ஓவரில் வில் யங் 15 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் இந்தியாவை அச்சுறுத்திய ரவீந்திராவை குல்தீப் யாதவ் தான் வீசிய முதல் பந்திலே போல்டாக்கினார். ரவீந்திரா 29 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்னில் அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் அனுபவ வீரர் வில்லியம்சனையும் குல்தீப் யாதவ் அவுட்டாக்கினார். வில்லியம்சன் 11 ரன்னில் பெவிலியன் திரும்பினார். 75 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணிக்காக மிட்செல் – டாம் லாதம் ஜோடி சேர்ந்தது.

மிட்செல் பொறுப்பான ஆட்டம்:

இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆட டாம் லாதம் 30 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்தில் அவுட்டானார். இதையடுத்து, மிட்செல் – ப்லிப்ஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். இதனால், நியூசிலாந்து ரன் சற்று உயரத்தொடங்கியது. ப்லிப்ஸ் அதிரடி காட்டாமல் ஓரிரு ரன்களாக எடுத்தார். ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் அனுப்பினார். மறுமுனையில் மிட்செல் மிகவும் நிதானமாக ஆடினார்.

இந்திய அணிக்கு குடைச்சல் தந்த இந்த ஜோடியை வருண் சக்கரவர்த்தி பிரித்தார். அவரது சுழலில் கிளென் ப்லிப்ஸ் போல்டானார். அவர் 52 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 34 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். மிகவும் நிதானமாக ஆடிய மிட்செல் அரைசதம் கடந்தார். அரைசதம் கடந்த பிறகு அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட மிட்செல், முகமது ஷமி பந்தில் அவுட்டானார். அவர் 101 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 63 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.

கடைசியில் கலக்கிய ப்ராஸ்வெல்:

கடைசியில் நியூசிலாந்து அணிக்காக  ப்ராஸ்வெல் அதிரடி காட்டினார். அவர் பவுண்டரிகளும், சிக்ஸரும் விளாச 45வது ஓவரில் 200 ரன்களை எட்டிய நியூசிலாந்த அணி, கடைசி 5 ஓவர்களில் நல்ல ரன்களை எட்டியது. ப்ராஸ்வெல் கடைசியில் அபாரமாக ஆடி 40 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 53 ரன்களை எடுத்தார். இதனால், நியூசிலாந்து அணி 251 ரன்களை எடுத்தது. இந்திய அணிக்கு 252 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அசத்திய சுழல், எடுபடாத வேகம்:

இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுழலில் இந்தியா சிறப்பாக பந்துவீசியிருந்தாலும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சு சிறப்பாக அமையவில்லை. முக்கிய வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமியின் பந்தில் 9 ஓவர்களில் 74 ரன்களை நியூசிலாந்து எடுத்தனர். அவர் 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார். பாண்ட்யா 3 ஓவர்களில் 30 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

Related Post

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை…

Posted by - May 28, 2023 0
ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில்…

சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டார் – பிசிசிஐயில் முகமது சிராஜ் புகார்

Posted by - April 20, 2023 0
அந்த நபரின் செல்போன் எண்ணை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர், விசாகப்பட்டினம் அருகே அந்த நபரை கைது செய்தனர். சூதாட்டத்தில் பணத்தை இழந்த ஒருவர் அணியின்…

கம்பீரை வம்புக்கு இழுத்த கோலி – முழு வீடியோ இதோ!

Posted by - May 2, 2023 0
கம்பீர் – விராட் கோலி இருவரும் மோதிக்கொள்வது போல் ஆக்ரோஷமாக நேருக்கு நேர் நிற்க இரு அணி வீரர்களும், நிர்வாகிகளும் சூழ்ந்தனர் ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று லக்னோ…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

பழி தீர்க்க காத்திருக்கும் ரோகித் படை! – பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா தோனி படை..!

Posted by - May 6, 2023 0
 ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *