மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரம் – போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம்!

33 0

மயிலாடுதுறை அருகே சாராய வியாபாரிகளால் இளைஞர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் பெரம்பூர் காவல்நிலைய போலீசார் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கடந்த மாதம் 14-ம் தேதி சாராய வியாபாரிகளால் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பெரம்பூர் போலீசார், ராஜ்குமார், தங்கதுரை, மூவேந்தன், முனுசாமி, மஞ்சுளா ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவத்தின் எதிரொலியால் பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவள்ளி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

தொடர்ந்து எஸ்பி தனிப்பிரிவு போலீஸ் பிரபாகர், உதவி ஆய்வாளர்கள் மணிமாறன், சங்கர் ஆகியோரும் அடுத்தடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பெரம்பூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய 19 போலீசாரை கூண்டோடு பணியிட மாற்றம் செய்து மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Related Post

ஆயுர்வேதத்தின் படி தொப்புளில் இந்த எண்ணெய் வைப்பது உங்களுக்கு பல அற்புத நன்மைகளை கொடுக்குமாம்…!

Posted by - December 13, 2023 0
பழமையான இந்திய மருத்துவ முறையான ஆயுர்வேதம், நாபிகா மர்மா என்றும் அழைக்கப்படும் தொப்புளை பல உடல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்ட ஒரு முக்கிய இடமாக கருதுகிறது. தொப்புளில் எண்ணெய்…

இவர்கள் கோவிலுக்கு வர வேண்டாம் என எந்தக் கடவுளும் சொல்லவில்லை -நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted by - January 25, 2023 0
2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் நடிப்பி மலையாளத்தில் உருவான ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் நேரடியாக ஓடிடி…

‘இந்தி தெரியாது போடா’ என சொல்லிவிட்டு இப்ப ‘கேலோ இந்தியா’-வாம்… சூடு, சொரணை இல்லாத உதயநிதி – நடிகை விந்தியா விமர்சனம்

Posted by - January 29, 2024 0
திமுக இளைஞரணி மாநாடு பயனுள்ளதாக இல்லை என்றும், அது சர்க்கஸ் மாநாடு என அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா கிண்டலடித்துள்ளார். பழனியில் முன்னாள்…

சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு- திரளான பக்தர்கள் தரிசனம்

Posted by - September 21, 2023 0
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சங்கரலிங்கம், சங்கரநாராயணர், கோமதி அம்மன் ஆகிய 3 சன்னதிகள் அமைந்துள்ளன. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடந்து…

தவெக மாநாடு : விக்கிரவாண்டியில் குவியும் தொண்டர்கள்… இத்தனை சிறப்பு ஏற்பாடுகளா?

Posted by - October 27, 2024 0
தவெக மாநாட்டிற்கு வருபவர்களின் மொபைல் சிக்னல் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தற்காலிக டவர் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநாட்டு திடலில் 150 மருத்துவர்கள் உட்பட 350 பேர் அடங்கிய மருத்துவக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *