அமெரிக்க அதிபர் ட்டம்பின் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தையும் இன்று கடும் சரிவை சந்தித்துள்ளன.
இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்திருப்பதற்கான காரணம் என்ன? என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை சர்வு
அமெரிக்க சந்தைகளில் ஒரே இரவில் ஏற்பட்ட கடுமையான சரிவைத் தொடர்ந்து, இந்திய பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்துள்லன. அமெரிக்காவில் மந்தநிலை ஏற்படக்கூடும் என பரவிவரும் தகவல்கள் மற்றும் ஐடி பங்குகளில் ஏற்பட்ட கூர்மையான வீழ்ச்சிக்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியுள்ளனர். சென்செக்ஸ் கிட்டத்தட்ட 400 புள்ளிகள் சரிந்தது, அதே நேரத்தில் நிஃப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.
பொருளாதார மந்தநிலை மற்றும் வர்த்தக பதற்றங்கள் குறித்த அச்சங்களால் தூண்டப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவு, இந்திய பங்குகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள முக்கிய ஐடி பங்குகளும் கடும் சரிவைக் கண்டதால் நிலைமை மோசமடைந்துள்ளது. இது சந்தையில் எதிர்மறையான உணர்வை அதிகரித்து, முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
வங்கி பங்குகள் வீழ்ச்சி:
சந்தை தொடங்கியதும் ஏற்பட்ட விழ்ச்சியில் இருந்து மெல்ல மெல்ல இந்திய பங்குகள் மேலெழுந்து வருகிறது. 10 மணி நிலவரப்படி, நிஃப்டி வங்கிகள் 400 புள்ளிகள் அளவிற்கும், நிஃப்டி ஐடி நிறுவனங்கள் 560 புள்ளிகளையும், ஸ்மால் கேப் நிறுவனங்கள் 520 புள்ளிகளையும் இழந்துள்ளது. அதிகபட்சமாக இண்டஸ்லேண்ட் வங்கி 180 புள்ளிகள் சரிவ சந்தித்துள்ளது. ஐடி பிரிவில் இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் அதிகபட்ச சரிவை கண்டுள்ளன.
வல்லுநர்கள் சொல்வது என்ன?
பங்குச்சந்தை சரிவு குறித்து பேசும் வல்லுநர்கள், “ உலகளாவிய காரணிகளால் சந்தைகள் அழுத்தத்தில் உள்ளன. அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட விற்பனை இந்திய பங்குகளை பாதித்துள்ளது. இருப்பினும் நீண்ட கால முதலீட்டாளர்கள் தரமான பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கலாம் மற்றும் தற்போதைய நிலைகளில் மேலும் சேர்க்கலாம். டாலர் குறியீட்டின் சரிவு மூலதன வெளியேற்றத்தைக் குறைப்பதன் மூலம் இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தைகளுக்கு பயனளிக்கும். முதலீட்டாளர்கள் பீதியடையாமல், உயர்தர பெரிய-மூலப் பங்குகளை குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் நடுத்தர மற்றும் சிறிய-மூலப் பங்குகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்” என அறிவுறுத்துகின்றனர்.
அமெரிக்க சந்தையில் மந்தநிலை?
அமெரிக்க பங்குச் சந்தைகள் கடந்த 2022 க்குப் பிறகான மிகப்பெரிய அளவில் ஒரே நாளில் ஏற்படும் சரிவை நேற்று பதிவு செய்தன. S&P 500 மற்றும் Nasdaq 4% வரை சரிந்தன, அதே நேரத்தில் Dow Jones 2.08% சரிந்தது. அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளால், பங்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
வர்த்தக் போர் அச்சம்:
டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் மற்றும் வரிவிதிப்பு முறைகள் முதலீட்டாளர்கள், வணிகங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் நிச்சயமற்ற தன்மையை அதிகரித்துள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இது ஒரு பெரிய விற்பனையைத் தூண்டியுள்ளது. கடந்த மாதம் S&P 500 அதன் உச்சத்தை எட்டிய நிலையில், தற்போது கிட்டத்தட்ட $4 டிரில்லியன் இழப்பை சந்தித்துள்ளது.
சீனா, கனடா மற்றும் மெக்சிகோ போன்ற முக்கிய பொருளாதார நாடுகளும் நடந்து வரும் வர்த்தக மோதல்கள் பொருளாதார வீழ்ச்சி குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளன. முன்னர், வர்த்தக நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் வணிக செலவினங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் இப்போது அது அமெரிக்காவில் மந்தநிலைக்கு வழிவகுக்கும் என்ற கவலைகள் அதிகரித்து வருகின்றன.