ஸ்டார்லிங்க் இன்டர்னெட் ஸ்பீடெல்லாம் சூப்பர் தான்.. ஆனா பில் எவ்வளவு தெரியுமா.?!!

20 0

இந்தியாவில், ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஸ்பேஸ் எக்ஸ்ஸின் ஸ்டார்லிங்க் இணைய சேவையை வழங்க உள்ளன. இந்த அதிவேக இன்டர்நெட் சேவைக்கான விலை எவ்வளவு தெரியுமா.?

இந்தியாவில், செயற்கைக்கோள் மூலம் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமாக, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளன. இதன் மூலம் அதிவேக இணைய வசதி கிடைக்கும். இந்த சேவைக்கான கட்டணங்கள் எவ்வளவு இருக்கலாம் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஸ்டார்லிங்க்குடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஒப்பந்தம்

உலக அளவில் மிகப்பெரிய ஒரு மொபைல் ஆபரேட்டர் நிறுவனங்களாக விளங்கி வரும் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளன.

தனது வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்கும் விதமான, ஏர்டெல் நிறுவனம் ஸ்டார்லிங்குடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஏர்டெல் வாயிலாக வழங்கப்படும் ஸ்டார்லிங்க சேவையால், இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவை இணைக்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமும், அதன் வாடிக்கையாளர்களுக்கு, லோ எர்த் ஆர்பிட் (Low Earth Orbit) செயற்கைக்கோளை வைத்து உலகம் முழுக்க அதிவேக இணைய சேவையை வழங்கிவரும் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அதிவேக இணைய சேவை வழங்கப்பட உள்ளது.

ஜியோ மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் இணைப்பினால், இந்தியாவின் உள் பகுதிகள் மற்றும் தொலைதூர பகுதிகளுக்கும் தடையில்லாத அதிவேக இணைய சேவை கிடைக்கும். ஸ்டார்லிங்க், ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபருடன் இணைந்து விரைவாகவும், குறைந்த விலையிலும் நெட்வொர்க் சேவைகளை வழங்க உள்ளது.

ஸ்டார்லிங்குடனான இந்த இணைப்பு, இந்தியாவின் டிஜிட்டல் இணைப்பு பரிணாமத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், இந்த ஸ்டார்லிங்க் இணைய சேவையை, தங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் ஆன்லைன் ஸ்டோர் பிராண்ட் மூலம் கிடைக்கச் செய்ய உள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்டார்லிங்க் அதிவேக இணைய சேவையை பெற கட்டணம் எவ்வளவு.?

இந்திய அரசின் ஒழுங்குமுறை ஒப்புதலுக்குப்பின் கிடைக்க இருக்கும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பூட்டான் போன்ற அண்டை நாடுகளில் உள்ள அதன் சேவைக் கட்டணங்களின் அடிப்படையில், தோராய கட்டண விவரங்கள் வெளியாகியுள்ளன.

வீடுகளுக்கு, அவரவர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப, ஸ்டார்லிங்க் ரெசிடென்ஷியல், ஸ்டார்லிங்க் ரெசிடென்ஷியல் லைட் என இரண்டு விதமான சேவைகளை வழங்குகிறது ஸ்டார்லிங்க். அதன்படி,

  • ஸ்டார்லிங்க் ரெசிடென்ஷியல் சேவை கட்டணம் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.4,203.
  • ஸ்டார்லிங்க் ரெசிடென்ஷியல் லைட் சேவை கட்டணம் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.3,002.

அதிவேக இன்டர்நெட் கிடைக்கும் பட்சத்தில், இந்த கட்டணங்கள் ஓரளவிற்கு ஏற்கக்கூடியதாக இருந்தாலும், இதற்கான வன்பொருளை(Hardware) வாங்குவதில்தான் சிக்கலே உள்ளது. அதிலும் இரண்டுவிதமான வன்பொருளை வழங்குகிறது ஸ்டார்லிங்க். அதாவது, ஸ்டார்லிங்க் ஸ்டாண்டெர்ட்(Standard), ஸ்டார்லிங்க் மினி என இரண்டு வன்பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி,

  • ஸ்டார்லிங்க் Standard: வீட்டில் பெருத்தக்கூடிய வகையில், 3-ம் தலைமுறை ரூட்டருடன் கூடிய இந்த வன்பொருளுக்கு மாத கட்டணம் தோராயமாக ரூ.33,027.
  • ஸ்டார்லிங்க் மினி: ஒரு பையில் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட வைஃபை ரூட்டர், குறைந்த மின்சாரத்தில் இயங்கி, 100 எம்பிபிஎஸ்-க்கும் அதிகமான பதிவிறக்க வேகம் கொண்டது. இதற்கான கட்டணம், மாதத்திற்கு தோராயமாக ரூ.17,013.

ஸ்டார்லிங்க் இந்திய சேவைக்கான கட்டணம் எவ்வளவு.?

ஸ்டார்லிங்க்கின் இந்திய சேவைக்கான கட்டண விவரங்கள் கசிந்துள்ளன. அதன்படி, வன்பொருளுடன்(Hardware) கூடிய ஒரு முறை கட்டணமாக 20,000-த்திலிருந்து 38,000 ரூபாய் வரையிலும், மாத சந்தாவாக 5,000 முதல் 7,000 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆனால், இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகளுக்கான சராசரி வருவாயான ரூ.400 முதல் ரூ.600-ஐ விட இது அதிகமாக உள்ளது. எனவே, இந்தியாவில் உள்ள நிலவரங்களை ஆராய்ந்து, அதற்கென தனி கட்டணங்களை நிர்ணயித்தால் மட்டுமே, ஸ்டார்லிங்க்கால் இங்கு தாக்குப்பிடிக்க முடியும்.

செயற்கைக்கோள் உதவியுடன் வழங்கப்படும் அதிவேக இன்டர்நெட் சேவையாக இருந்தாலும் கூட, இந்திய மக்களின் வாங்கும் திறனுக்கேற்பவே கட்டணங்களை நிர்ணயிக்க வேண்டும். ஸ்டார்லிங்க் என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

Posted by - June 3, 2023 0
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.…

கேபிள் டிவி முடிஞ்சது.. Jio ஆபர்.. 800 டிவி சேனல்.. குவியுது கூட்டம் ரூ.1000-க்கு.. 12 ஓடிடி.. வாய்ஸ் கால்கள்!

Posted by - December 4, 2024 0
#jio #jioairfiber #jiosetupbox #jiotv #jiocinema #ipl2025 ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்துக்கு ஆஃபர்களை கொடுக்க சொல்லித் தரவா வேண்டும் என்று நினைக்கும்படி ரூ.1000-க்கும் கம்மியான…

அடடே இதெல்லாம் தெரியாம போச்சே.. சர்வதேச எழுத்தறிவு தினம்.. சுவாரஸ்ய தகவல்கள்

Posted by - September 8, 2023 0
நமது பிரபஞ்சத்தில் நாம் பிறந்த தினம் தவிர்த்து- பொங்கல், புத்தாண்டு, தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்று பண்டிகை மற்றும் விசேஷ நாட்கள் என ஆண்டின் 365 நாட்களில்…

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயம்..

Posted by - March 15, 2024 0
மேற்கு வங்க முதலமைச்சராக மம்தா பானர்ஜி பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், மம்தா பானர்ஜி விபத்தில் படுகாயமடைந்துள்ளதாக அக்கட்சி X தளத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளது. அதில் அவர்…

மும்பையில் சினிமாவை மிஞ்சும் விபத்து: சுங்கசாவடியில் 6 கார்கள் மோதியதில் 3 பேர் பலி

Posted by - November 10, 2023 0
மும்பை: மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப் பாலத்தில் அடிக்கடி தற்கொலைச் சம்பவங்கள் நடக்கிறது. மும்பையில் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலம் மிகவும் பிரபலமாகும். இந்தப்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *