தமிழ்நாடு அரசு பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனடியாக அறிந்துகொள்ள தொடர்ந்து pixeltamil.com இணையதளத்துடன் இணைந்து இருங்கள்.
Tamil Nadu Budget 2025 LIVE Updates: ரமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம்
தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கத்திற்கு ரூ.500 கோடி நிதி. கோவை மற்றும் பல்லடத்தில் செமி கண்டக்டர் பூங்கா அமைக்கப்படும். ஓசூர் மற்றும் விருதுநகரி டைடல் பூங்கா அமைக்கப்படும். ஓசூர் டைடல் பூங்காவிற்கு ரூ.400 கோடி நிதி. திருச்சியில் 280 ஏக்கரில் வார்ப்பக பூங்கா அமைக்கபப்டும். ரமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும். – அமைச்சர் தங்கம் தென்னரசு
மருத்துவத்துறைக்கு ரூ.2, 900 கோடி நிதி
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா புற்றுநோய் மையத்தை மேம்படுத்த 120 கோடி ஒதுக்கீடு. நடமாடும் வாகனங்கள் மூலம் புற்றுநோயை கண்டறியும் கருவிகளை வாங்கிட 40 கோடி ஒதுக்கீடு. மருத்துவத்துறைக்கு 21 ஆயிரத்து 900 கோடி நிதி ஒதுக்கீடு. 150 கோடியில் 10 தொழிற்பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
8 புதிய கலை அறிவியல் கல்லூரிகள்
பள்ளி பாடத்திட்டத்தில் சதுரங்க விளையாட்டு சேர்க்கப்படும். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.572 கோடி நிதி ஒதுக்கீடு. ஐ.ஏ.எஸ்., முதன்மை தேர்வில் பயின்று நேர்முக தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொக்கை வழங்கப்படும். 8 மாவட்டங்களில் புதியதாக கலை அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
ரூ.2,500 கோடி கல்விக்கடன்
சென்னையில் அறிவியல் மையம் அமைப்பதகு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் ரூ.2500 கோடி கலவிக்கடன் வழங்க இலக்கு உயர்கல்வித்துறைக்கு மொத்தமாக 8 ஆயிரத்து 494 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 50 மூன்றாம் பாலினத்தவர்கள் உரிய பயிற்சிகளுக்கு பிறகு, ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவர் – அமைச்சர் தங்கம் தென்னரசு
கல்லூரிகளில் புதிய பாடத்திட்டங்கள்
ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு என மொத்தமாக 29 ஆயிரத்து 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பொறியியல் கல்லூரிகளில் இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ரோபோடிக்ஸ் துறை சார்ந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்படும். மணவர்கள் அதிகம் சேரும் அறிவியல் பாடப்ப்பிரிவுகளில் கூடுதலாக 15 ஆயிரம் இடங்கள் ஏற்படுத்தப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
அண்ணா பல்கலை., ரூ.500 கோடி நிதி
சமுக நலன் மற்றும் மகளிர் நலன் துறைக்கு 8 ஆயிரத்து 597 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தை ஆசியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு. மலைப்பகுதிகளில் மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க, இடைநிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.46,767 கோடி
நிதி நிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறைக்கு என 46 ஆயிரத்து 767 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டி தேர்வு எழுதுவோருக்கு சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படுன்ம். சேலம், கடலூர், திருநெல்வேலியில் தலா ஒரு லட்சம் புத்தகங்களுடன் புதிய நூலகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
2676 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
மும்மொழிக்கொளையை ஏற்காததால் மத்திய அரசு 2 ஆயிரத்து 152 கோடி நிதியை விடுவிக்கவில்லை. 2000 அரசுப்பள்ளிகளில் 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும். 2676 பள்ளிகளில் 65 கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் – அமைச்சர் தங்கம் தென்னரசு
பள்ளிக்கல்வித்துறைக்கான அறிவிப்புகள்
குழந்தை நல மையங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.83 கோடி நிதி ஒதுக்கீடு. அரசுப்பள்ளிகளில் கூடுதல் கட்டிடங்களை கட்ட 1000 கோடி நிதி ஒதுக்கப்படும். 1721 முதுகலை ஆசிரியர்களும், 841 பட்டதாரி ஆசிரியர்களும் விரைவில் பணி நியமனம் செய்யப்படும். காலை உணவுத்திட்டம் நகர்ப்புற பள்ளிகளுகும் விரிவாக்கம் செய்யப்படும். – அமைச்சர் தங்கம் தென்னரசு
மேலும் 10 தோழி விடுதிகள்
சென்னையில் சீரான குடிநீர் விநியோகத்திற்காக 2 ஆயிரத்து 423 கோடி ரூபாய் செலவில் சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். 10 கோடி ரூபாய் செலவில் மூத்த குடிமக்களுக்கு அன்புச்சோலை திட்டம் செயல்படுத்தப்படும்,10 இடங்களில் 77 கோடி ரூபாய் செலவில் புதிய விடுதிகள் கட்டப்படும். இதன் மூலம் ஒரே நேரத்தில் 800 பேர் பயனடைவர் – அமைச்சர் தங்கம் தென்னரசு
நிதி விடுவிக்காத மத்திய அரசு
100 நாள் வேலைதிட்டத்திற்கான ரூ.3 ஆயிரத்து 790 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு. சென்னை, கோவை மற்றும் மதுரையில் 275 கோடி ரூபாய் செலவில் விடுதிகள் கட்டப்படும். ஒவ்வொன்றிலும் தலா ஆயிரம் பேர் தங்கலாம் – அமைச்சர் தங்கம் தென்னரசு
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.37 ஆயிரம் கோடி கடன்
வரும் 2025-26 நிதியாண்டில் மகளிர் உரிமைத்தொகை விநியோகத்திற்காக 13 ஆயிரத்து 807 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மகளிர் விடியல் பயணத்திற்கு ரூ.3 ஆயிரத்து 600 கோடி நிதி ஒதுக்கீடு. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடன் வழங்கப்படும். கூடுதலாக 10 ஆயிரம் குழுக்கள் உருவாக்கப்படும் – அமைச்சர் தங்கம் தெனன்ரசு
மகளிர் உரிமைத்தொகை திட்டம்
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் புதியதாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். புதுமை பெண் திட்டத்திற்கு 420 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் தங்கம் தென்னரசு
2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம்
சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த புதிய நகரம் அமைக்கப்படும். அங்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறும். மெட்ரோ வசதி, பேருந்துகள், சாலை போக்குவரத்து போன்றவை புதிய நகரில் இடம்பெறும் – அமைச்சர் தங்கம் தென்னரசு