உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்…

34 0

வாணியம்பாடி அருகே தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி, நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்காமல் வேகமாக சென்றதால், அதை பின் தொடர்ந்து சென்று பேருந்தில் ஏறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாணியம்பாடியில், அரசுப் பேருந்து ஒன்று நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால், தேர்வுக்காக காத்திருந்த 12-ம் வகுப்பு மாணவி ஒருவர், வெகு தூரம் பேருந்தின் படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு அபாயகரமாக ஒடிய காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பேருந்தை பிடிக்க அபாயகரமாக ஓடிய மாணவி

பள்ளி மாணவர்களுக்கு தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கொத்தகோட்டை பகுதியில், 12 ஆம்  வகுப்பு மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார். இந்த நிலையில், திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயம் செல்லக்கூடிய அரசுப் பேருந்து, கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி, தேர்வுக்கு நேரமாகிவிடும் என்ற அச்சத்தில், பேருந்தை பின் தொடர்ந்து ஓடி, படியில் உள்ள கம்பியை பிடித்துக்கொண்டு, தொடர்ந்து ஓடியுள்ளார். வெகு தூரம் இப்படி மாணவியை ஓடவிட்ட பேருந்து ஓட்டுநர், பின்னர் ஒருவழியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். அதன் பிறகு அந்த மாணவி பேருந்து ஏறிச் சென்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இன்று காலை நிகழ்ந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த பேருந்து ஓட்டுநருக்கு மனசாட்சியே இல்லையா என்றும், அவருடைய பெண்ணாக இருந்தால் இப்படி செய்வாரா என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கோபத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே, மாணவி பேருந்துக்காக ஓடிய வீடியோ வைரலான நிலையில், அந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

கும்பகோணம்:கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த மாணவி… கும்பகோணத்தில் பரபரப்பு

Posted by - February 3, 2025 0
நீண்ட நேரம் கழித்துதான் அந்த மாணவி வகுப்பறைக்கு வந்துள்ளார். அப்போது அந்த மாணவியின் உடலில் பல மாற்றங்களை கவனித்த சக மாணவிகள் விசாரித்துள்ளனர். மேலும் மாணவியின் ஆடையில்…

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மூலிகை தேநீர்

Posted by - December 11, 2023 0
புதுணர்வு தரும் பானமான தேநீர், உலக அளவில் பெரும்பான்மையான மக்களால் விரும்பப்படுகிறது. காலையில் எழுந்ததும் தேநீர் பருகாவிட்டால், பலருக்கும் அன்றைய நாள் முழுமை பெறாது. கலாசாரம் மற்றும்…

இடத்தகராறு காரணமாக வழக்கறிஞர் உள்பட 2 பேர் வெட்டிக் கொலை – தென்காசியில் பரபரப்பு

Posted by - June 30, 2023 0
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையே இடத்தகராறு நிலவியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த சம்பவத்தில் வழக்கறிஞர் அசோக் குமார்…

20 லட்சம் மதிப்புள்ள 557 கிலோ நாட்டு வெடிகள் 204 மூலப்பொருள் மூட்டைகளை பறிமுதல்

Posted by - October 31, 2023 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார்கோயில் காவல் சரகத்திற்கு உட்பட்ட நாகரசம்பேட்டை கிராமத்தில் ரமேஷ்குமார் என்பவர் வீட்டில் வெடி பொருட்கள் மற்றும் வெடி தயாரிப்பதற்கான மருந்து பொருட்கள்…

செப்டம்பர் மாதத்தில் பள்ளிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா? – மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Posted by - August 31, 2023 0
4-12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.27 தேதி முதல் அக்.2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *