லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
லியோ படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மேத்யூ தாமஸ், பிரியா ஆனந்த் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்க பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன்
இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் லியோ படத்தை குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ,’லியோ திரைப்படத்தின் கதை மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது”.
“இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் என்னை வித்தியாசமான ஆக்ஷன் தோற்றத்தில் காட்டப்போகிறார். விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர். அவருடன் சேர்ந்து நடிப்பது ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.