அசாம் மாநிலம்
ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால் ஒரு கடையில் பிடித்த தீ மற்ற கடைகளுக்கும் பரவியது. இதில் 150 கடைகள் எரிந்து நாசமானது.
தகவல் அறிந்ததும் 25 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சாலைகள் குறுகலாக இருந்ததால் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது.
ஆனால் வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இரவில் கடை உரிமையாளர்கள் கடைகளை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்தில் துணி, மளிகை பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. சேத மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது