புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14-ந்தேதி பாதிப்பு 74 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 102, நேற்று 126 ஆக உயர்ந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 658 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 39 பேர் குணமடைந்துள்ளனர்.
இதில் நேற்று 129 பேர் அடங்குவர். தற்போது 1,862 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றைவிட 27 அதிகமாகும். தொற்று பாதிப்பால் புதிதாக உயிரிழப்பு இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 5,30,757 ஆக நீடிக்கிறது.