நட்பாக பழகிய நர்சிங் மாணவிக்கு மது கொடுத்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நண்பர்கள்

124 0

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. வாலிபரின் நண்பரும், மாணவியுடன் நெருங்கி பழகினார்.பாலியல் புகார் அளிக்கச் சென்ற பட்டியலினச் சிறுமி; அடைத்துவைத்து பெல்ட்டால்  அடித்த காவலர்கள்! | 13-year-old girl kept at police station beaten up as  she seeks to file rape ...

இதனால் மூவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். அந்த வகையில் கடந்த 18-ந் தேதி அந்த மாணவியை தனது வீட்டுக்கு வருமாறு வாலிபர் அழைத்தார். வீட்டில் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் சென்று விடலாம் என்று மாணவியிடம் வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி அந்த மாணவி அன்று மாலை வாலிபரின் வீட்டுக்கு சென்றார்.

வீட்டில் வாலிபரின் நண்பரும் இருந்தார். அவரை மாணவிக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் அவருடனும் மாணவி பேசினார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர்கள், பின்னர் மது அருந்த தொடங்கினர்.

மாணவியையும் மது குடிக்குமாறு கூறினர். முதலில் மது குடிக்க மறுத்த மாணவி, பின்னர் நண்பரின் வற்புறுத்தலால் சிறிது மது குடித்தார். இதில் போதை தலைக்கேறியதால் மாணவி மயங்கி விழுந்தார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட வாலிபர்கள் இருவரும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தனர். அன்று இரவு முழுவதும் மாணவியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்தனர்.

இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மறுநாள் காலையில் எர்ணாகுளம் பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு வாலிபர்கள் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி மாணவி, தனது தோழி ஒருவரிடம் கூறி அழுதார்.

நேற்று கல்லூரிக்கு சென்ற மாணவி மன உளைச்சலுடன் காணப்பட்டார். எனவே கல்லூரி ஆசிரியைகள், மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தனர். அப்போதுதான் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி மாணவி ஆசிரியைகளிடம் தெரிவித்தார்.

அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவிக்கு மது கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்களை தேடினர். மேலும் மாணவர்களின் செல்போன் எண்களை கொண்டு அவர்கள் பதுங்கி இருந்த இடத்தையும் கண்டுபிடித்தனர்.

உடனடியாக அங்கு சென்ற போலீசார் இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் பிடித்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிடிப்பட்ட இருவரும் இதுபோல வேறு யாரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்களா? என்பது பற்றியும் விசாரணை நடந்து வருவதாக அவர்களை பிடித்த போலீசார் தெரிவித்தனர்.

Related Post

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு மோடி இன்று சர்ப்ரைஸ்? பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா ரூ.2000

Posted by - February 24, 2025 0
டெல்லி: பிஎம் கிஸான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு 19வது தவணையாக சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு ரூ.23,000 கோடியை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.. 18வது…

திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து ..

Posted by - November 30, 2022 0
சிகரெட் பிடித்துவிட்டு அணைக்காமல் வீசி சென்றதால் தீ விபத்து. தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது. திருப்பதி ரெயில் நிலையத்தில்…

இன்று வெளியாகும் ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ.. விலை, கிரே மார்க்கெட் விலை இதுதான்..

Posted by - August 2, 2024 0
இன்று Ola Electric Mobility Limited இன் பங்குகள் கிரே மார்க்கெட் ரூ.17 பிரீமியத்தில் கிடைக்கின்றன என்று சந்தை பார்வையாளர்கள் கூறுகின்றனர். அதன் ஐபிஓ விலை, மார்க்கெட்…

நாகலாந்தில் நிலச்சரிவு: ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் சுக்குநூறாக நசுங்கிய கார்கள்- வைரலாகும் வீடியோ

Posted by - July 5, 2023 0
நாகலாந்தில் திமாபூர் மற்றும் கோஹிமா இடையே சுமோகெடிமா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29-ல் நேற்று மாலை ஏற்பட்ட நிலச்சரிவில் பெரிய பாறைகள் மலையில் இருந்து உருண்டு…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *