திருவாரூர், நாகையில் திடீர் மழை – விவசாயிகள் கவலை

122 0

நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவினாலும், தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாகை, திருவாரூர், தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகாலை முதல் சாரல்மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் மழையால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது பெய்து வரும் சாரல் மழை காரணமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருகின்றன. விவசாயிகள் தார்ப்பாய்களை கொண்டு நெல் மூட்டைகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்தால் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்போம் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரில் பல இடங்களில் லேசான தூரல் மழையும், பல இடங்களில் மழை பெய்வது போன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

Related Post

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வருகை… ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்கிறார்!

Posted by - February 20, 2024 0
கட்சியின் தொண்டர்கள் அழைத்தார்கள் அதனால் தேசிய செயற்குழு கூட்டத்தில் தரையில் அமர்ந்தேன் – அண்ணாமலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வரும் 27 மற்றும் 28ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள…

பகுதிநேர ஆசிரியர்கள் கைது; ’’திமுகவின் துரோகத்துக்கு தேர்தலில் சரியான பாடம் புகட்டப்படும்’’- ராமதாஸ்

Posted by - December 11, 2024 0
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, அவர்களுக்கு அளிக்கப்பட்ட எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பணி நிரந்தரம் கோரி போராடிய பகுதிநேர ஆசிரியர்களை…

அதிமுக பொதுச் செயலாளராகிறார் ஈபிஎஸ் – பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Posted by - March 28, 2023 0
சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம்…

ரூ.9 ஆயிரம் கோடி வரவு வைக்கப்பட்ட விவகாரம் – தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சிஇஓ ராஜினாமா

Posted by - September 29, 2023 0
சென்னை: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் அவர்…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - December 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *