குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்

126 0

குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.Maggi Omelette Recipe | Maggi Egg Omelette | Noodles Omelette | Easy Snacks  Recipe|Breakfast Recipe - YouTube

தேவையான பொருட்கள்

மேகி பாக்கெட் – 1

முட்டை – 2

கேரட் துருவல் – 2 டீஸ்பூன்

குடைமிளகாய் – 1

தக்காளி – 1 (சிறியது)

ப.மிளகாய் – 3

வெங்காயம் – 1 (சிறியது)

உப்பு, எண்ணெய் – சிறிதளவு

மஞ்சள் – 1 சிட்டிகை

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை :

வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .

மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும்.

தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.

பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும். அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.

Related Post

கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

Posted by - April 21, 2023 0
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப் தக்காளி…

நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

Posted by - June 28, 2023 0
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின்…

யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வேதனை- என்ன ஆனது?

Posted by - January 5, 2024 0
மஞ்சிமா மோகன் நடிகை மஞ்சிமா மோகன் ஒரே ஒரு படம் மூலம் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின்…

கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சிருக்கீங்களா..? சூப்பரான ரெசிபி இதோ

Posted by - March 26, 2024 0
உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் திரும்ப திரும்ப செய்து கொடுக்க சொல்வார்கள். மட்டன்…

ராகி சேமியா வெஜிடபிள் கட்லெட்

Posted by - March 3, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. தேவையான பொருட்கள் ராகி சேமியா – 100 கிராம், உருளைக்கிழங்கு – 3, கேரட்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *