அட! விஜய்யின் ‘லியோ’ படத்தில் தனுஷா? வேற லெவல் தகவல் !

121 0

தளபதி விஜய்யின் லியோ படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரைத் தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்தப் படத்தின் முக்கிய சண்டைக்காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டுவருகிறதாம். இந்தப் படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் டீசர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற ஜுன் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துவருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக இந்தப் படத்தை லலித் குமார் தயாரித்துவருகிறார்.

இந்த நிலையில் விக்ரம் படத்தில் ரோலேக்ஸ் என்ற வேடத்தில் சூர்யா நடித்ததுபோல, இந்தப் படத்தில் சிறப்பு வேடத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறாராம். ரோலெக்ஸ் அளவுக்கு அழுத்தமான வேடத்தில் தனுஷ் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் இதற்காக 15 நாட்கள் கால்ஷீட் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்கிறார். இதில் ஹைலைட் என்னவென்றால் விஜய்க்கு மட்டுமல்ல, திரிஷாவுக்கும் இது 67வது படமாம். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

Related Post

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 7, 2023 0
காதர் பாட்சா வசூல் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த…

நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

Posted by - July 3, 2024 0
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல…

கவினின் அடுத்த படம் ‘ஸ்டார்’.. வைரலாகும் போஸ்டர் இதோ

Posted by - August 29, 2023 0
கவின் நடிகர் கவினின் அடுத்த படம் படம் பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. இது பற்றிய ஹிண்ட் நேற்றே அவர்கள் கொடுத்திருந்த நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் மற்றும்…

இதே வேலையா போச்சு.. என்ன அதிகாரம் இருக்கு! மிஷ்கினை கிழித்து தொடங்கவிட்ட விஷால்

Posted by - January 27, 2025 0
இயக்குனர் மிஷ்கினுக்கு இதே வேலையாய் போச்சு, மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது, சில பேரின் சுபாவங்களை என்னைக்குமே மாற்ற முடியாது. இளையராஜா குறித்து கொச்சையாக பேசிய…

கீர்த்தி சுரேஷை வாழ்த்திய தளபதி விஜய்! ட்ரெண்டாகும் போட்டோ!

Posted by - December 19, 2024 0
மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி ஆகிய இருவரையும் நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்திய புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *