தோனிக்கு கிஃப்ட் கன்பார்ம் ……

221 0

சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் ‘தல’ என அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இன்று ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான மைல்கல்லை எட்டவுள்ளார். 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனிக்கு 200-வது போட்டியாகும்.

தோனி கேப்டனாக களமிறங்கும் இந்தப்போட்டி சென்னையில் நடக்கவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கில்லி படத்துல விஜய் சொல்லுற மாதிரி “ இந்த ஏரியா, அந்த ஏரிய, எங்கேயுமே எனக்கு, பயம் கிடையாது டா… ஏன்னா ஆல் ஏரியாலேயும், அய்யா கில்லி டா…”. என சென்னை வீரர்கள் காலரை தூக்கிட்டு போவார்கள் ஏன்னா சென்னை அணிக்கு அப்படி ஒரு ஃபேன் பேஸ் இருக்கு. ‘

இந்தியாவில் எந்த மைதானத்தில் சென்னை அணி விளையாடினாலும் அங்கு மஞ்சள் ஆர்மி படை குவிந்துவிடுவார்கள். சென்னை வீரர்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும் ஹோம் க்ரவுண்ட் ஃபீல் தான் இருக்கும். எதிரணிக்கே கொஞ்சம் பொறாமையா தான் இருக்கும் தோனியின் மஞ்சள் படையை பார்க்கும்போது.அப்படி இருக்க தோனி கேப்டனாக களமிறங்கும் 200-வது போட்டி அதுவும் சென்னை சேப்பாக்கம் க்ரவுண்ட்ல ஃபேன் சப்போர்ட் சொல்லவே வேண்டும். சிஎஸ்கே வீரரான ஜடேஜாவோ நானே பெரிய ‘தல’ ஃபேன் தான் அப்புறம் தான் சென்னை ப்ளேயர் எல்லாம் என தெறிக்கவிட்டிருக்கார்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனா 200 ஆவது போட்டியில் தோனி களமிறங்கிகுறார். கேப்டனாக 200 ஆவது போட்டியில் விளையாடும் தோனிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றியை பரிசாக தருவோம்” என அதிரடியாக சொல்லியிருக்கார் ஜடேஜா..

Related Post

கடைசி பந்து வரை உச்சக்கட்ட பரபரப்பு… 5வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றது தல தோனி படை..!

Posted by - May 30, 2023 0
மழையால் 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை அணி, கடைசிப்…

அகமதாபாத்தில் இன்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு… வெதர் மேன் சொன்ன வானிலை தகவலால் சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 29, 2023 0
16 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை நிலவரங்கள் கூறும் நிலையில் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 16-ஆவது ஐபிஎல்…

இறுதி ஓவரில் இரண்டு ஸ்டம்புகளை உடைத்த அர்ஷ்தீப் சிங்… அதன் விலை இத்தனை லட்சமா?

Posted by - April 23, 2023 0
மும்பைக்கு எதிரான போட்டியின் இறுதி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 2 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில்,…

கோட்டைவிட்ட வீரர்கள்… டிராவில் முடிந்த மொராக்கோ-குரோஷியா ஆட்டம் .

Posted by - November 23, 2022 0
இரு தரப்பிலும் தீவிரமான தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். சமனில் முடிந்ததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று குரூப்-எப்…

மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?

Posted by - April 10, 2025 0
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *