CSK Vs RR.. ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி..!

207 0

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில்  வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த படிக்கல் 38 ரன்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் சாம்சன் ரன் எடுக்காமலும், அஷ்வின் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ரன்னில் அவுட் ஆனார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ரன்னில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 ரன்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ரன்னும், மொயின் அலில் 7 ரன்னும், அம்பத்தி ராயுடு 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜாவுடன் கேப்டன் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 6 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா 25 ரன்களும், தோனி 32 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

Related Post

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது SRH அணி

Posted by - May 3, 2024 0
பரபரப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அபாரமாக ஆடிய சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி ராஜஸ்தான் அணியை 1 ரன் வித்தியாசத்தில்…

நான் ஃபினிஷர் தான்டா..! தோனியின் 5 வருட காத்திருப்பு, மூச்சு விடும் சென்னை – ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் மாற்றம் என்ன?

Posted by - April 15, 2025 0
தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி…

எனக்கு பயந்து வருது, கண்ணீரோடு எதிர்நீச்சல் சீரியல் நந்தினி வெளியிட்ட வீடியோ- ரசிகர்கள் சோகமான கமெண்ட்

Posted by - June 8, 2024 0
எதிர்நீச்சல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் எல்லா சீரியலுமே மக்களின் ஆதரவை பெறுவதில்லை. ஆனால் ஒரு சில தொடர்கள் முடிவுக்கு வந்தால் மக்களும் சரி, அதில் நடித்த நடிகர்களும் சரி…

ப்ளே ஆஃப் சுற்றை உறுதிசெய்யுமா சென்னை?

Posted by - May 20, 2023 0
சென்னை அணியைப் போன்றே, 15 புள்ளிகளைப் பெற்றுள்ள லக்னோ அணி, இந்தப் போட்டியில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்று வாய்ப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் உள்ளது. ஐபிஎல் ப்ளே-ஆப்…

கோட்டையை இழந்த CSK, கோப்பை வரைக்கும் எப்புடி.. தோனியின் மீதே அதிருப்தி வர வைத்த சம்பவம்!

Posted by - April 6, 2025 0
Chennai Super Kings: படம் பிளாப் ஆனா என்ன தல ஸ்கிரீனில் வந்தா மட்டும் போதும். போட்டியில் தோத்தா என்ன தல ஆடிட்டோரியத்துக்கு வந்தா மட்டும் போதும். சென்னை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *