‘பிச்சைக்காரன்-2’ தடை கோரி மேலும் ஒரு வழக்குப்பதிவு

118 0

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள பிச்சைக்காரன்-2 படத்துக்கு  தடை விதிக்க கோரி மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  ராஜகணபதி என்பவர்  தாக்கல் செய்துள்ள மனுவில் தங்களது  தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கெனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது.  அப்படத்தின் கதையை  அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் -2 என்ற படத்தை எடுத்துள்ளதாகவும் எனவே பிச்சைக்காரன்-2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.  இந்த படத்துக்கு தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம் விசாரணையை வருகிற 18-ந்தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், பரணி என்ற உதவி இயக்குனர் தொடர்ந்துள்ள வழக்கில், தான் அஜித் நடித்த சிட்டிசன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளதாகவும், பிச்சைக்காரன் 2 படத்தின் மூலக்கதை தன்னுடைய கதை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கதையை  பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதே கதையை தற்போது பிச்சைக்காரன் 2 என்ற பெயரில் விஜய் ஆண்டனி தயாரித்துள்ளதாகவும் எனவே படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு வருகிற செவ்வாய்க்கிழமை  விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Posted by - February 17, 2025 0
சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.இந்நிலையில் இன்று அவர்…

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய…

கேப்டன் மில்லர் பிஸினஸ் இத்தனை கோடிகளா?- தனுஷின் அடுத்தக்கட்டம்

Posted by - January 5, 2024 0
கேப்டன் மில்லர் தமிழ் சினிமாவில் இவர் எல்லாம் ஒரு நடிகரா என ஆரம்பத்தில் விமர்சிக்கப்படுபவர் தனுஷ். ஆனால் இப்போது இவரின் நடிப்பை பற்றி பாராட்டாத பத்திரிக்கையே இல்லை…

சினிமாவுக்கு போடும் அஸ்திவாரம்.. டாப் ஹீரோவுடன் திடீர் மீட்டிங் போட்ட சச்சினின் வைரல் புகைப்படம்

Posted by - February 16, 2023 0
கிரிக்கெட்டில் மிகப்பெரும் ஜாம்பவானாக இருக்கும் சச்சினுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை பெருமைப்படுத்திய கிரிக்கெட் வீரர்களில் சச்சினுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இப்படி புகழின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *