இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மட்டும் ?சென்னை அணி பயிற்சியாளர் பிராவோ கொடுத்த ஷாக்…

274 0

இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது

இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத விரும்பவில்லை என சென்னை அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர் பிராவோ தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. மேலும் லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி குவாலிபயர் -2க்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது குவாலிபையர் போட்டி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இறுதிப் போட்டி இதே மைதானத்தில் வரும் ஞாயிறுக்கிழமை நடைபெற உள்ளது. நாளைய போட்டியில் யார் வெற்றி பெற்று சென்னை அணியுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வேண்டாம் என சென்னை அணியின் பவுலிங் பயிற்சியாளர் பிராவோ வேடிக்கையாக தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டிக்கு பின் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேசிய பிரவோ, ’இது எனது தனிப்பட்ட ரீதியிலான உணர்வு. இறுதிப் போட்டியில் எங்களுடன் விளையாடும் அணியாக மும்பை இந்தியன்ஸ் இருக்க வேண்டாம் என நான் கருதுகிறேன்.

 

என் நண்பர் பொல்லார்ட் அதை அறிவார். இறுதிப் போட்டிக்கான ரேஸில் உள்ள அணிகளுக்கு எனது வாழ்த்துகள். நாங்கள் எதிர்கொள்ள உள்ள அந்த அணியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளேன். அதற்கான ரேஸில் உள்ள அணிகள் தரமான மற்றும் எதிரணிக்கு அச்சுறுத்தல் தரக்கூடிய அணிகள் என்பதையும் அறிவேன் என பிராவோ தெரிவித்துள்ளார். இதை வேடிக்கையாக அவர் தெரிவித்திருந்தார்.

Related Post

‘சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்’ – டெவோன் கான்வே புகழாரம்

Posted by - April 30, 2023 0
எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். சிறந்த…

கடைசி வரை திக்… திக்! மும்பையை வதம் செய்த ரவீந்திரா, ருதுராஜ்! சிஎஸ்கே சூப்பர் வெற்றி!

Posted by - March 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 முறை சாம்பியன்…

கடைசி பந்து வரை நீடித்த பரபரப்பான ஆட்டம்…

Posted by - May 1, 2023 0
முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்திருந்தது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப்…

தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?

Posted by - March 29, 2025 0
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை…

மீண்டும் கேப்டனான தோனி.. இனியாவது தேறுமா சிஎஸ்கே.?

Posted by - April 10, 2025 0
ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *