ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில் மோதுகிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை அதாவது 10முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி என்ற சாதனையை படைத்த சென்னை அணிக்கு செய்ய காத்திருக்கும் சாதனைகள் என்ன என்பது குறித்து பார்போம்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற சாதனையை படைத்த மும்பை அணி (5முறை ) என்ற சாதனை படைத்துள்ளது. நாளை ஐபிஎல் கோப்பையை தோனி தலைமையிலான சென்னை அணி நாளை கோப்பையை கைப்பற்றினால் அந்த சாதனையை சமன் செய்ய முடியும்

சென்னை அணி கோப்பையை வென்றால் ஐபிஎல் கோப்பையை ஜெயித்த வயது முதிர்ந்த கேப்டன் (41) என்ற சாதனையை தோனி படைப்பார்.

இறுதிப்போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 36 ரன்கள் அடித்து சிஎஸ்கே கோப்பையை வென்றால், ஐபிஎல்லில் கோப்பையை வென்ற அணிக்கு 2 முறை 600 ரன்களுக்கு மேல் பங்களிப்பு செய்த வீரர் என்ற சாதனையை ருதுராஜ் கெய்க்வாட் படைப்பார். 2021ல் சிஎஸ்கே கோப்பையை ஜெயித்தபோதும் ருதுராஜ் 600 ரன்களுக்கு மேல் அடித்திருந்தார்.

ஐபிஎல் வரலாற்றில் 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை சென்னை அணி கேப்டன் தோனி படைக்கவுள்ளார். மேலும் அதிக முறை இறுதிப்போட்டியில் விளையாடிய வீரர் மற்றும் கேப்டன் என்ற சாதனையையும் தோனி படைக்கவுள்ளார்.