சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என உரையாற்றினோம்
அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தல் நான்காவது போர் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் முத்தரையர் சமூகத்தின் தலைமை அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சியினர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்த்து பயப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார். கருணாநிதியை விட, சமூக நீதியை காக்க மு.க.ஸ்டாலின் செயல்படுவதால்தான் அவரை பார்த்து பயப்படுகின்றனர் என்றும் கூறினார்.
தமிழ்நாடு முத்தரையர் சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட கட்டடத்தை சிந்தாதிரிப்பேட்டை பங்களா தெருவில் இன்று திறந்து வைத்தோம்.
சந்தித்த அத்தனை போர்களிலும் வெற்றியை மட்டுமே கண்ட பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செய்து, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில்… pic.twitter.com/fDLfnXbnkJ
— Udhay (@Udhaystalin) May 30, 2023
கடந்த 2019 நாடளுமன்ற தேர்தல், அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தல், அதற்கடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தல் என மூன்று போர்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது எனக் கூறிய உதயநிதி ஸ்டாலின், வர இருக்கிற 2024 நாடளுமன்ற தேர்தல் 4வது போர் என்றும் அதிலும் திமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டில் எல்லோரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு சமத்துவத்தை – சகோதரத்துவத்தை பேணிகாப்போம் என்று உரையாற்றினார்.
முத்தரையர் சமூக மக்களுக்கு ஏராளமான திட்டங்களை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.