முக்கிய ஆவணங்கள் சிக்கியதால் சிக்கலா…மாட்டிக்கொண்டு முழிக்கும் செந்தில் பாலாஜி…

107 0

கோவையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் நடைபெற்று வந்த சோதனை காலை 8.15 மணி அளவில் நிறைவு பெற்றது.

 

மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத்‌ துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்து வருகிறார். கரூர் மாவட்டத்தை சேர்ந்த இவர், கோவை மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்ததை அடுத்து தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை, கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் புகார் அளித்திருந்தனர்.

மேலும், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த போதும் திமுக அமைச்சர்களின் ஊழல் தொடர்பான புகார்களை அடங்கிய கோப்புகளை அளித்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு மற்றும் உறவினர்கள் வீடு, ஒப்பந்ததார்கள் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த 26ம் தேதி சோதனை நடத்தினர்.

குறிப்பாக அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த கோவை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர் செந்தில் கார்த்திகேயன் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

 

இந்நிலையில் கோல்டு வின்ஸ் பகுதியில் திமுக பிரமுகர் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் 5வது நாளாக நடைபெற்று வந்த சோதனை நிறைவடைந்தது. அலுவலகத்தில் இருந்த சில ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போல ரேஸ்கோர்ஸ் பகுதியில் அரவிந்தன் என்பவர் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்று வந்த சோதனையும் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. கோவை மாவட்டத்தில் 7 இடங்களில் நடைபெற்ற சோதனை நிறைவடைந்துள்ளது.

Related Post

சிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்கணுமா? அப்ப இந்த ஆரோக்கியமான உணவுகளை குறைவாக சாப்பிடுங்க…!

Posted by - October 25, 2023 0
சிறுநீரக கற்கள், அல்லது சிறுநீரக கால்குலி, சிறுநீரகங்களில் உருவாகக்கூடிய வலிமிகுந்த கனிம குவிதல் ஆகும். கால்சியம், ஆக்சலேட் மற்றும் யூரிக் அமிலம் போன்ற சிறுநீரில் உள்ள சில…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து மரணமடைந்தார்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - September 8, 2023 0
நடிகர் மாரிமுத்து #actormarimuthu #ethirneechal #tamilserial #suntv #rip #jailer சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கலக்கி வருபவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி…

எண்ணெய் நிறுவன கழிவுகளை மீனவர்கள் அள்ளுவதா? அப்பாவி மக்களைப் பலியாக்குவதா? சீமான் கண்டனம்

Posted by - December 15, 2023 0
சென்னை: சென்னை அருகே எண்ணெய் நிறுவனத்தின் கழிவுகளை மீனவப் பெருங்குடி மக்களை அள்ள சொல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா – விளக்கம் அளித்த ஆண்டாள் கோயில் நிர்வாகம்!

Posted by - December 16, 2024 0
அதைத் தொடர்ந்து அர்த்த மண்டப நுழைவு வாயிலில் வைத்து இளையராஜாவிற்கு மரியாதை அளித்தனர். அதன்பின் இளையராஜா வெளியே வந்து நின்று சாமி தரிசனம் செய்தார். மேலும் “திவ்ய…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *