ரயில் விபத்து.. தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு

180 0

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

ஒடிசா ரயில் விபத்தையொட்டி தமிழகத்தில் இன்று ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவின் பாலசோர் என்ற பகுதியில் நேற்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. கொல்கத்தாவிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது.

விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 288 பேர் பலியாகினர்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் தெரிவித்தார்.

தேவைப்பட்டால் தமிழ்நாட்டின் மருத்துவ குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பவதாகவும் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்மேலும், ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒரு நாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும் அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Post

நாளை சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்

Posted by - July 1, 2023 0
புதுடெல்லி: அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம… கம…, சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன்…

இந்திய பெருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது: ஐ.நா. தகவல்

Posted by - January 6, 2024 0
2023-ம் ஆண்டில் உலகளாவிய சவால்களை இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு, உலகின் அதிவேக வளர்ச்சி விகிதத்துடன் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி 2024-ல் 6.2 சதவீதமாக…

வங்கி கணக்குகளில் ரூ.1 லட்சம் வரை திடீர் டெபாசிட்- இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்

Posted by - August 29, 2023 0
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் உள்ள பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் நேற்று முன்தினம் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ ஒரு…

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - February 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

விலை உயர்வை கட்டுப்படுத்த கூடுதலாக 2 லட்சம் டன் வெங்காயம் கொள்முதல்: மத்திய அரசு தகவல்

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: வரவிருக்கும் காரீப் பருவத்தில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்து விலை உயரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே விலை உயர்வை கட்டப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *