ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு

182 0

புவனேசுவரம் :

ஒடிசாவில் பாலசோர் அருகே கடந்த 2-ந்தேதி சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயில், மற்றொரு சரக்கு ரெயில் என 3 ரெயில்கள் மோதி நேரிட்ட சங்கிலித்தொடர் விபத்தில் 288 பேர் பலியாகினர். இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

அடையாளம் காண முடியாமல் சிதைந்து போன உடல்கள், மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், அங்கு விட்டுச்செல்லப்பட்டுள்ள யஷ்வந்த்பூர்-ஹவுரா அதிவேக ரெயிலின் பெட்டியில் இருந்து பிண வாடை வீசுவதாகவும், இன்னும் அதனுள் உடல்கள் கிடப்பதாகவும் சம்பவம் நடந்த பாகாநாகா பஜார் ரெயில் நிலையம் அருகே வசிப்பவர்கள் கூறினர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரெயில் பெட்டியில் பிண வாடையா?: புதிய பரபரப்பு | Dead  body in Odisha train coach accident sensation

இதுபற்றிய புகார் எழுந்து, ரெயில்வே அதிகாரிகள், மாநில அரசின் உதவியுடன் அந்த ரெயில் பெட்டியை ஆய்வு செய்தது. அதைத் தொடர்ந்து தென் கிழக்கு ரெயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஆதித்ய குமார் சவுத்ரி கூறும்போது, “அந்த ரெயில் பெட்டியில் மனித உடல்கள் இல்லை. அழுகிய முட்டைகளைத்தான் பார்த்தோம்.

அந்த ரெயிலில் பார்சல் பெட்டியில் 3 டன் முட்டைகள் எடுத்து வரப்பட்டன. எல்லா முட்டைகளும் அழுகிப்போய் விட்டன. அந்த நாற்றம்தான் வந்துள்ளது. அந்த முட்டைகளை 3 டிராக்டர்கள் மூலம் விபத்து நடந்த இடத்தில் இருந்து அகற்றி விட்டோம்” என குறிப்பிட்டார்.

Related Post

இந்த பட்ஜெட் பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் – முதல்வர் புகழாரம்

Posted by - February 1, 2025 0
விவசாயிகளுக்கான கிசான் கிரிடிட் கார்டுகளுக்கான உச்ச வரம்பு ரூ.3. இலட்சத்திலிருந்து ரூ.5 இலட்சமாக உயர்த்தி கடனுதவியை அதிகரித்திருப்பது விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த உதவும் – முதல்வர் ரங்கசாமி…

அவங்க தான் காரணம்.. ஃபேஸ்புக் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சாமியார்!

Posted by - May 2, 2023 0
அயோத்தியை சேர்ந்த 28 வயதான பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நரசிம்மா கோயிலில் பூசாரியாக இருந்து வந்த ராம் சங்கர்…

பயங்கரவாதிகளிடம் சிக்கி துடிதுடித்து மரணித்த மணிப்பூர் மாணவன், ”நீட்” மாணவி- உருக்கமான தகவல்கள்!

Posted by - September 27, 2023 0
இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலங்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது மணிப்பூர் மாணவர் மற்றும் மாணவியின் படுகொலைகள். பள்ளி சிறுவர்களை கடத்திச் சென்று பயங்கரவாதிகள் சித்ரவதை செய்து…

கண் இமைக்கும் நேரத்தில் உருக்குலைந்த ரெயில்கள்.. விபத்து நேர்ந்தது எப்படி…?

Posted by - June 3, 2023 0
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று மலை 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 250க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *