வீடுகளுக்குள் 16 பேர் இருக்கும்போதே 3 மாடி கட்டிடத்தை நவீன எந்திரம் மூலம் தூக்கிய உரிமையாளர்

149 0

ஐதராபாத்:

ஐதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையை விட தாழ்வான நிலைக்கு மாறின. இதன் காரணமாக மழை பெய்த போது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இந்த நிலையில் அங்குள்ள 3 அடுக்கு மாடி வீட்டை சாலையை விட சற்று மேலே உயர்த்த அதன் உரிமையாளர் முடிவு செய்தார்.

அதற்காக நவீன ஹைட்ராலிக் எந்திரத்தை வரவழைத்தார். கடந்த சனிக்கிழமை தனது வாடகை வீடுகளில் வசிக்கும் யாருக்கும் தகவல் தெரிவிக்காமலும், மாநகராட்சியிடம் உரிய அனுமதி பெறாமலும் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்குமாடி வீட்டை அடித்தளத்தில் இருந்து உயர்த்த உரிமையாளர் முயற்சி செய்தார்.

அப்போது 3 அடுக்குமாடி கட்டிடம் பக்கத்தில் இருந்த மற்றொரு அடுக்குமாடி கட்டிடத்தின் மீது சாய்ந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் குத்புலாபூர் போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.அப்போது ஹைட்ராலிக் எந்திரம் மூலம் கட்டிடத்தை தூக்கிய போது வாடகை வீடுகளில் 16 பேர் இருந்தனர் என்பது தெரிய வந்தது.

அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏற்படவில்லை.யாருக்கும் காயமும் ஏற்படவில்லை. இதையடுத்துக் கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதனிடையே சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க ஐதராபாத் மாநகராட்சி உத்தரவிட்டது. இதன் பேரில் அந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.

Related Post

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

Posted by - September 28, 2023 0
இம்பால்: மணிப்பூரில் 4 மாதங்களுக்கும் மேலாக மெய்தி-குகி இன மக்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. இந்த கலவரத்தில் 170-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தை ஒடுக்குவதற்காக மாநில…

ஒரு மாநிலமே ஆன்லைன் மோசடியில் சிக்கிய பரிதாபம்; ஒரே ஆண்டில் ரூ.64 கோடி இழந்த மக்கள்

Posted by - January 5, 2025 0
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், ஆன்லைன் மோசடியில் சிக்கிய 64.2 கோடி ரூபாயை இழந்துள்ளனர். புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 64.2 கோடி ரூபாயை,…

இனி ஸ்டைலாக மாட்டி செல்ல முடியாது: வாகன ஓட்டிகள் கழுத்தில் ஹெட்செட் அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

Posted by - July 27, 2023 0
திருப்பதி: வாகனங்களில் செல்பவர்கள் தற்போது ஹெட்செட், இயர்போன் போன்றவற்றை கழுத்தில் அணிந்தபடி அதிகளவில் செல்கின்றனர். மேலும் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசிய படியும், கழுத்தில் போன் ஹெட்…

10,12-ம் வகுப்பு மாணவா்களுக்கு இனி மதிப்பெண் சதவீதம் இல்லை- சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

Posted by - December 2, 2023 0
புதுடெல்லி: மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது.…

சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் செய்த மோசடி: ரூ.25 ஆயிரம் கோடி முதலீட்டின் நிலைமை என்ன?

Posted by - November 16, 2023 0
மும்பை: சஹாரா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுப்ரதாராய் நேற்று முன்தினம் காலமானார். 1978-ம் ஆண்டு ரூ.2 ஆயிரம் முதலீட்டில் சஹாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை தொடங்கிய சுப்ரதா…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *