வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா உரிமை கோரிவருவதும் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ச்சியாக நடந்துவரும் நிகழ்வுகள். அப்பகுதிகளை நைன் டேஸ் லைன் (nine dash line) என சீனா குறிப்பிடுகிறது.
மார்கோட் ராபி மற்றும் ரியான் கோஸ்லிங் நடித்த “பார்பி”, முதலில் ஜூலை 21 ஆம் தேதி வியட்நாமில் திரையிட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சீனாவால் உரிமை கோரப்பட்ட நிலப்பரப்பைக் காட்டும் வரைபடத்தைக் கொண்ட ஒரு காட்சி வார்னர் பிரதர்ஸின் “பார்பி” திரைப்படத்தில் உள்ளதால் உள்நாட்டில் திரையிட வியட்நாம் தடை விதித்துள்ளது.