பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு

146 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி பைக்கில் வைத்துக் கொண்டு அங்குள்ள சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர்.நிதி நிறுவனம் நடத்தி கூடுதல் வட்டி தருவதாக மோசடி செய்த கும்பல் | complaint  against Fraud gang in police

அங்குள்ள மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கிச் சென்ற வாலிபர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய சிறுமி சாலைக்கு ஓடி வந்து காப்பாற்றுமாறு கூச்சலிட்டார். அந்த வழியாக வந்த திருநங்கை ஒருவர் சிறுமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றார். அவரை கண்டதும் வாலிபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

திருநங்கை சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அவரது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். சிறுமியை பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த திருநங்கைக்கு போலீசார் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Post

GENERAL NEWS“40 நாட்கள், 8 கட்ட தரையிறக்கம்! சந்திரயான் 3ன் நிலவு பயணம்! தரையிறங்கும் Vikram Lander!”

Posted by - August 23, 2023 0
சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் பயணத்தை முடித்து இன்று மாலை நிலவில் தரையிறங்குகிறது. நிலவில் சந்திரயான்-3 பத்திரமாக கால் பதிக்க முக்கியமான பத்து கட்டங்களை கடக்க வேண்டியுள்ளன.…

இந்தியாவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்..! ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்..

Posted by - April 5, 2023 0
உலகம் முழுவதும் பொருளாதார மந்த நிலையால், நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை விகிதமும் அதிகரித்து வருவதாக ஆய்வுகளில் தெரிய வருகிறது. இந்தியாவில்…

ஏழ்மையிலும் விடா முயற்சி- வேதியியலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண் கூலி தொழிலாளி

Posted by - July 19, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், நாகுல கூடேம் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவருக்கு 3 சகோதரிகள் உள்ளனர். வீட்டிற்கு மூத்த மகள் பாரதி. இவர் பிளஸ்…

ஆண்டுக்கு ஆண்டு அதிகரிப்பு: இந்தியாவில் புற்றுநோய்க்கு 8 லட்சம் பேர் பலி

Posted by - July 29, 2023 0
புதுடெல்லி : மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக, தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின்…

மகாராஷ்டிராவில் சோகம் – 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் 18 நோயாளிகள் பலி

Posted by - August 14, 2023 0
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே அருகே உள்ள கல்வா பகுதியில் சத்ரபதி சிவாஜி மாநகராட்சி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *