பாகிஸ்தானில் துணிகரம் – இந்துக் கோவில்கள் மீது தொடர் தாக்குதல்

128 0

லாகூர்:

பாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் ராணுவ வீரர்களுக்கான பஜார் பகுதியில் முகி சோஹித்ரம் சாலையில் 150 ஆண்டுகால பழமையான இந்து கோவில் ஒன்று அமைந்திருந்தது. இந்த கோவிலுக்கு இந்து சமூகத்தினர் சென்று வழிபட்டு வந்தனர்.

மாரி மாதா என்ற பெயரிலான அந்த கோவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடு இரவாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அடுத்த நாள் காலையில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோவில் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இரவில் மின்சாரம் இல்லாத நிலையில், புல்டோசர்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து கோவிலை இடித்து தள்ளி விட்டுச் சென்றனர். கோவிலின் உட்புற பகுதி முழுவதும் இடித்து தள்ளப்பட்டு உள்ளது. எனினும், வெளிப்புற சுவர்கள் மற்றும் முக்கிய நுழைவு வாயிலை அவர்கள் விட்டு சென்று உள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனம் ஒன்றும் காணப்பட்டது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர் என அங்கிருந்து வெளிவரும் டான் பத்திரிகை தெரிவிக்கிறது. இதேபோல், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மீது, கொள்ளையர்கள் ராக்கெட் லாஞ்சர்’களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Related Post

சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் – மகளிரை பெருமைப்படுத்த சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்

Posted by - March 8, 2023 0
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சிறப்பு டூடுல் வெளியிட்டு பெண்களை கூகுள் கவுரவித்துள்ளது. பெண்களுக்‍கு பெண்கள் ஆதரவாக இருக்‍க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், தன் சக பெண்களுக்‍கு…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்

Posted by - August 8, 2023 0
19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன.…

Google Pay-க்கு குட்பை? தூக்க மாட்டோம்னு சொல்லிட்டு சுந்தர் பிச்சை பார்த்த வேலை.. இனிமேல் ஒன்னு ஒன்னா மாறும்!

Posted by - June 5, 2024 0
கூகுள் நிறுவனம் அதன் டிஜிட்டல் வாலட் (Digital Wallet) ஆன கூகுள் வாலட்டை (Google Wallet) இந்தியாவில் அறிமுகப்படுத்தியதில் இருந்தே.. “அப்போ இந்தியாவுல கூகுள் பே ஆப்பின்…

தாயின் கருப்பையில் இருக்கும் போதே பச்சிளம் குழந்தைகளின் மூளையை தாக்கும் கொரோனா- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Posted by - April 10, 2023 0
வாஷிங்டன்: 2020-ம் ஆண்டு சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெரும் உயிரிழப்புகளையும், கோடிக்கணக்கானவர்களை நோயாளிகளாகவும் ஆக்கியது. இதைத்தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு எதிராக…

1200 அடி உயரத்தில் ஊசலாடிய கேபிள் கார் – 14 மணி நேரத்துக்கு பின் குழந்தைகள் உள்பட 8 பேரும் மீட்பு

Posted by - August 23, 2023 0
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ளது கைபர் பக்துன்வா பிராந்தியம். இது கரடுமுரடான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், நதிகளும், சமநிலைகளும் நிறைந்த ஒரு பிரதேசம் ஆகும். இங்குள்ள பள்ளத்தாக்குகளைக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *