சின்னத்திரையில் டிஆர்பியில் டாப் இடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான் என்று சொல்லலாம்.அனைத்து தரப்பு வயதினரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த சீரியலுக்கான தேடல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் உள்ளது.
ரசிகர்களிடம் கிடைத்து வரும் அதிக வரவேற்பின் காரணமாக சின்னத்திரை வரலாற்றில் முதன்முறையாக வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் சீரியல் என்கிற புதிய சாதனையை படைத்துள்ளது எதிர்நீச்சல்.
அதனை போல சமீபத்தில் கூட புதிய கார் வாங்கினார்..இதற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கையில் குழந்தையுடன் மதுமிதா புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். குழந்தையுடன் மதுமிதா இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மதுமிதாவின் குழந்தையா இது என ஷாக்காகி விட்டனர்.

ஆனால் உண்மையில் அது மதுமிதாவின் குழந்தை இல்லை,அது அவருடைய அக்காவின் குழந்தை.தனது அக்காவின் குழந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தான் நடிகை மதுமிதா சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்….இதை பார்த்த ரசிகர்கள் இப்போது தான் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர்.