தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாகவே இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ’Captain Miller’.1940 ஆம் ஆண்டுகளில் சுதந்திர போராட்ட வகையில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் சிவராஜ்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்கின்றனர்…
தனுஷ் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்த வரும் இந்த படத்தில் சந்திப் கிஷான், நிவேதிதா உள்பட பலர் நடித்து வருகின்றனர். GV பிரகாஷ் இசையில் உருவாகும் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..இது 150 கோடி பட்ஜெட் என சொல்லப்படுகிறது…
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் உருவாக்கும் எண்ணம் இருப்பதாகவும் முதல் பாகம் ரிலீஸ் ஆனவுடன் அது குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது..அது ஒரு பக்கம் இருக்க International லெவலில் முதல் பார்வையை படக்குழு வெளியிட்டு இருந்தது அது இணையத்தில் பெரிய History Create செய்தது..
இந்நிலையில் இன்று அப்டேட் வரும் என சொல்லப்படுகிறது அது தனுஷின் டீஸர் அப்டேட் என எல்லாரும் சொல்லி வருகின்றனர் அதனை போல தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக பல திரையரங்கில் ஷோ போடவுள்ளனர்…