வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள் வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க

116 0

சென்னை:

வெந்தயக்கீரை மட்டுமல்ல, இந்த செடியின் விதைகள், தண்டுகள் என அனைத்துமே மருத்துவமும், மகத்துவமும் நிறைந்தவையாகும்.

இந்த கீரையின் விதைகளின் கருவில் காலக்டோமன்னை காணப்படுகிறது. இளம் விதைகளில் கார்போஹைட்ரேட், சர்க்கரையும் முதிர்ந்த விதைகளில் அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள் கரோட்டீன் வைட்டமின்கள், ஜெட்ரோஜெனின், ட்ரைகோனெல்லோசைட், ட்ரைகோனெல்லின், ஆகிய வேதிப்பொருட்கள் உள்ளன.வெந்தயக்கீரை.. மளமளன்னு உடல் சதை கரையணுமா? சர்க்கரை நோயாளிகள்  வெந்தயக்கீரையை மட்டும் விட்றாதீங்க | Do you Know Health Benefits of  Venthaya Keerai and Excellent Uses of ...
விதைகள்:

இந்த விதைகளும் நோயை தீர்க்கும். சிறுநீர் பெருக்கத்தை அதிகரிக்கும். குளிர்ச்சியை தரக்கூடியது.. அஜீரணத்தை நீக்கும்.. மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யும்.. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும். நூறு கிராம் அளவு வெந்தயக்கீரையில் 86.1 சதவீதம் ஈரச்சத்தும், 4.4சதவீதம் புரதச்சத்தும், 1.1சதவீதம் நார்ச்சத்தும், 1.5சதவீதம் தாதுச்சத்துக்களும், 0.9சதவீதம் கொழுப்புச் சத்தும் அடங்கியுள்ளது. இதில், வைட்டமின் ஏ மற்றும் சுண்ணாம்புச்சத்து அதிகமாகவே உள்ளன.. அதனால், உடல் சோர்வாக உள்ளவர்கள் வெந்தயக்கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம்.

கண்பார்வை:

வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை அதிகரிக்கும். உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம். உடலை அழகாக வைத்துக் கொள்வதிலும், வனப்பை தக்க வைப்பதிலும், வெந்தயத்தின் பங்கு அலாதியானது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் + சிறிது கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, தினமும்சாப்பிட்டாலே தோலில் மினுமினுப்பு வரும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பிறகு பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.

தீக்காயங்கள்:

இந்த கீரையை பச்சையாகவே பச்சையாக அரைத்து தீக்காயங்களுக்கு பற்றுப்போட்டால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து பற்று போடலாம்.

நீரிழிவு நோய்க்கு மிகச்சிறந்த உணவாக இந்த கீரையை பயன்படுத்தலாம்.. தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். அதனால், நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது நல்லது. தொடர்ந்து 40 நாட்களுக்கு இந்த கீரையை சாப்பிட்டாலே நீரிழிவு கட்டுப்படுமாம். நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், காச நோய் கோளாறு உள்ளவர்களுக்கும் சிறந்த தேர்வு இந்த கீரை..

கீரைகள்:

கீரைகள் என்றாலே மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது என்றாலும், இந்த வெந்தயக்கீரையை, வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து சாப்பிட்டால், வயிறு சுத்தமாகும்.. குடல் புண்களும் குணமாகும்.. உயர் ரத்த அழுத்தம் பிரச்சனையை சரி செய்கிறது. வெந்தயக்கீரையை வெண்ணையில் வதக்கி சாப்பிட்டால், வயிறு உப்பசம், பசியின்மை போன்ற வயிறு கோளாறுகள் நீங்கும்.. இந்த கீரையின் தண்டுகூட மருத்துவ குணம் கொண்டது.. வெந்தயக்கீரையின் தண்டை அரைத்து, மோருடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும், வயிறு தொடர்பான பிரச்னைகள் தீரும்.வெந்தயக்கீரையை நெய்யுடன் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை விரைவில் ஆறும்.

உடல் எடை:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, வெந்தயக்கீரை பெஸ்ட் சாய்ஸ்.. காரணம், மிக மிக குறைவான கலோரிகளே இதில் உள்ளதால், எடையை குறைக்க உதவும். கண்பார்வை பிரச்சனைகளையும், நரம்பு தளர்ச்சி பிரச்சனைகளையும் இந்த கீரை சரிசெய்யக்கூடியது.. முக்கியமாக, பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுவதில், இந்த கீரையின் பங்கு அபரிமிதமானது.. பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த கீரையை அடிக்கடி சமைத்து தந்தால், பால் உற்பத்தி பெருகும்.. அல்லது கஞ்சியில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தந்தாலும் பால் சுரக்கும். இந்த வெந்தய விதைகளில், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை செய்யலாம் என்றாலும். வெந்தயத்தில் களி செய்யலாம்.. இந்த வெந்தயக்களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது..

கொலஸ்ட்ரால்:

மாரடைப்பு, கண்பார்வைக் கோளாறு, வாதத்தை சரி செய்கிறது. ஹீமோகுளோபின் பிரச்சனையை சரி செய்கிறது. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. இந்த கீரை குளிர்ச்சி என்பதால் முடி கொட்டுவதை தடுக்கிறது.. வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, நைசாக அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி உதிர்வதுநிற்கும்..

Related Post

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

கோவில்:நாச்சியார்கோவில் அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்….

Posted by - June 5, 2024 0
திருவிழா: வைகாசி அமாவாசையைத் தொடர்ந்து நாச்சியார்கோவிலில் ஆகாச மாரியம்மனுக்குப் பதிமூன்று நாட்களுக்குத் திருவிழா நடைபெறுகிறது. தினம் தினம் ஒரு அலங்காரத்தில் அம்மன்  அருளாசி வழங்குகிறாள். தல சிறப்பு:…

தொண்டை வலியுடன் ஆஸ்பத்திரிக்கு படையெடுக்கும் நோயாளிகள்

Posted by - July 10, 2023 0
சென்னை: தொண்டை வலியுடன் கூடிய காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பருவ காலத்தில் பரவும் வழக்கமான…

கோவைக்கு பதில் மயிலாடுதுறை? கமல்ஹாசனால் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வந்த சிக்கல்

Posted by - February 26, 2024 0
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேரும் பட்சத்தில் கோவை தொகுதி ஒதுக்கப்படும் என தகவல். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோயம்புத்தூர் தொகுதிக்கு பதிலாக மயிலாடுதுறை தொகுதியை…

பல்வேறு இடங்களில் கைவரிசை- காதலனுடன் ஜாலியாக இருக்க கொள்ளையடித்த இளம் பெண்

Posted by - August 15, 2023 0
கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே புது வள்ளியாம்பாளையம் பிரிவை சேர்ந்தவர் ஜோதி வெங்கட்ராமன்.விரதம் மனைவி கோமதி. இவர்கள் மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *