பாஜகவுடன் இன்றைக்கும், என்றைக்கும் கூட்டணி இல்லை: அதிமுக தீர்மானம் முழு விவரம்..

188 0

இன்று முதல், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிக் கொள்கிறது என்று அதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த தீர்மானத்தை அக்கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே அதிமுக – பாஜக தலைவர்களிடையே கடுமையான விமர்சனங்கள் எழுந்து வந்தன.. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொள்ளும் என தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக அக்கட்சியின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிலையில், அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கும் உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் இன்று முதல் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது என அதிமுக ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதிமுகவின் அவசர ஆசோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரங்கள் பின்வருமாறு:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, கட்சியின் உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும்,  மறைந்த முன்னாள் முதல்வர்களான அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்சு, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை’ சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும்,  கழகப் பொதுச் செயலாளர்,  எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), கழகப் பொதுச் செயலாளர்,  எடப்பாடிபழனிசாமி தலைமையில் நடைபெற்ற, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

Posted by - June 5, 2024 0
ஆந்திராவில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான…

“பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள்”..ஆனால் இப்போ பாருங்க.!…இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!

Posted by - March 8, 2025 0
அதிமுக கட்சி எங்களுக்கு எதிரி இல்லை என கூறியிருந்த நிலையில், இன்று அதிமுகவை காட்டமாக விமர்சித்துள்ளார், அண்ணாமலை பாஜகவால் தோற்றோம் , பாஜக நோட்டா கட்சி என…

3ஆவது முறையாக பதவியேற்ற பிரதமர் மோடி – கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை அமைச்சர்கள்?

Posted by - June 10, 2024 0
கேரள மாநில வரலாற்றில் பாஜக சார்பில் முதல் எம்பியாக தேர்வாகியுள்ள நடிகர் சுரேஷ் கோபிக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மோடி 3ஆவது…

தவெக மாநாடு தேதி… உறுதியாக இருக்கும் விஜய் – செயல் திட்டம் இதுதான்!

Posted by - September 13, 2024 0
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் தங்களுடைய கொள்கை பிரகடன முதல் மாநில மாநாட்டை நடத்துவது என விஜய் தரப்பில் முடிவெடுத்தனர். அதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் தகவல்…

திமுகவை கடுமையாக தாக்கி கிழித்து தொங்கவிட்ட விசிக பிரமுகர் – 2026இல் திமுக காலி என சபதம்

Posted by - February 14, 2025 0
மயிலாடுதுறையில் நடைபெற்ற விசிகவின் ஆர்ப்பாட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து விசிக நிர்வாகி பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசிக ஆர்ப்பாட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *