சென்னை:
ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் வளர்க்கப்பட வேண்டிய மூலிகைகளில் ஒன்றுதான் சிறியாநங்கை.. ஆச்சரியத்தக்க மருத்துவ குணங்களை கொண்டது இந்த செடி.
நிலவேம்பு செடியை, சிறியாநங்கை என்று சொல்வார்கள்.. ஆனால், நிலவேம்பு செடியும், சிறியாநங்கையும் வேறு வேறு வகைகளாகும்.. நிலவேம்பு செடியை போலவே, இந்த செடியின் இலைகளும், வேர்ப்பகுதிகளும் மருத்துவ சக்தியை அடக்கி வைத்துள்ளது.
காய்ச்சல்கள்:
நிலவேம்புவை போலவே, இந்த செடியையும், விஷ காய்ச்சல்களை விரட்ட பயன்படுத்துவார்கள்.. குறிப்பாக மலேரியாவிற்கு இந்த மூலிகை மருந்தைதான் தருவார்கள்.. அதாவது ஃப்ளுகாய்ச்சல் முதல் சைனஸ், சளித்தொந்தரவு என நுரையீரல் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு மிகப்பெரிய பலனை இந்த சிறியாநங்கை தருகிறது.
பார்ப்பதற்கு வேப்பிலையை போலவே இருக்கும்.. சுவையிலும் வேப்பிலை போலவே கசப்பாக இருக்கும்.. நச்சுக்களை உடலில் சேர்க்காதவாறு இந்த சிறியாநங்கை செயல்படும்.
வேர்கள்:
அதனால்தான், அந்தக்காலத்தில் வேட்டைக்கு போகும்போது, சிறியா நங்கை செடியின் வேர்களை கைகளில் காப்பு போல கட்டிக்கொண்டு, வாயில் வேர்களை கடித்துக் கொண்டும் போவார்களாம். இதனால், மலைப்பகுதிகள், காட்டுப்பகுதிகளில் எந்த விஷஜந்துக்கள் கடித்தாலும், உடனே இந்த இலைகளுடன் சிறிது மிளகையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், விஷக்கடிகள் இறங்கிவிடுமாம். அல்லது, இந்த செடியை பொடி செய்து ஒரு மண்டலம் அதாவது, 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பாம்பு, தேள் என எது கடித்தாலும், அவைகள் இறந்துவிடுமாம்.
ஆனால், விஷம் உடலில் ஏறும்போது, கசப்பு தெரியாது.. அதனால், கசப்பு தெரியும்வரை இந்த இலையின் விழுதை விழுங்கவேண்டுமாம்.. கசப்பு தெரிந்துவிட்டால், விஷம் இறங்கிவிட்டது என்று அர்த்தமாம். கிராமங்களில் பாம்புக்கடிக்கும், தேள்கடிக்கும், இந்த சிறியாநங்கைதான் இன்னமும் மருந்தாகி கொண்டிருக்கின்றன.
சர்க்கரை நோய்:
தினமும் காலையில் சாப்பிடுவதற்கு முன்பு சிறியா நங்கையை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு மற்றும் அலர்ஜி வியாதிகளைக் குணப்படுத்தும். சர்க்கரை குணமாக்கவும், இந்த இலையை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.. இந்த இலையை காயவைத்து, பவுடராக்கி வைத்து சாப்பிட்டாலே போதும். உடலுக்கு நன்மைகள் கிடைக்குமாம்.. கல்லீரல் நோய்களை விரட்டுவதிலும், குடல் பாதுகாப்பிலும் இந்த சிறியாநங்கை சிறப்பாக செயல்படுகிறது..
கல்லீரல்:
குறிப்பாக, சிகரெட் பிடிப்பவர்கள், மது அருந்துபவர்களுக்கு கல்லீரலில் ஏற்படும் கெட்ட கழிவினை சுத்தப்படுத்த, இந்த இலையின் சாறு பேருதவி புரிகிறது. இந்த சிறியாநங்கை இலையை விழுதாக அரைத்து, அதன் சாறு மட்டும் தனியாக வடிகட்டி, அத்துடன் காய்ச்சாத பசும் பால் அல்லது மோர் சேர்த்து, வெறும் வயிற்றில், 15 நாட்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும்.. நச்சுக்கள் வெளியேறும்.
நீரிழிவு நோயாளிகள்:
வெறும் வயிற்றில், இதில் ஒரு இலையை மென்று சாப்பிட்டாலே இன்சுலின் சுரப்பு உண்டாகுமாம். சிறியா நங்கை பொடி என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது என்றாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நீண்ட நாட்கள் உள்ளுக்குள் எடுக்கக்கூடாது என்கிறார்கள்.. அதிலும், மண்ணீரல், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இந்த பொடியை டாக்டரின் ஆலோசனைப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டும்