தளபதி 68 பாடல் ரெடி.. கான்ஜூரிங் கண்ணப்பனில் வெளியான அப்டேட்

160 0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த டத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.என்ன நண்பா ரெடியா...' - தளபதி 68 படத்திலும் பாடும் விஜய்? | nakkheeran
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ படத்தின் புரொமோ வீடியோவில், “மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜாவிடம் காதல் தோல்வி அடைந்த ஒருவர் பாட்டு கேட்க வருகிறார். தொடர்ந்து அம்மா மீது பாசம் இல்லை என ஒருவர் வைத்தியம் பார்க்க வருகிறார். அவர்களுக்கு சில பாடல்களை பரிந்துரை செய்த மியூசிக் டாக்டர் யுவன் சங்கர் ராஜா அடுத்ததாக சதீஷ் வரும் போது அவரிடம் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்.

தனக்கு தூக்கம் வராமல் இருக்க ஒரு பாடல் வேண்டும் என்றும் தூக்கம் வந்தால் கனவில் நடப்பதெல்லாம் நிஜத்திலும் நடக்கிறது என்று கூறுகிறார். இதனை அடுத்து அவருக்கும் ஒரு பாட்டு கொடுக்கிறார். இதனை அடுத்து அவர் எழுந்து செல்லும் போது அனிருத் பாடல் ஒலிக்கிறது. அர்ச்சனா கல்பாத்தி மேடம் தான் கால் செய்தார்கள், ‘தளபதி 68’ படத்தின் பாடலையும் கேட்டு வரச் சொன்னார்கள் என்று கேட்க, அதற்கு யுவன் சங்கர் ராஜா வெளியில வெங்கட் பிரபு வெயிட் பண்ணுகிறார், அவரிடம் நான் சொல்லி கொள்கிறேன்” என்று கூறுவதுடன் இந்த வீடியோ முடிவடைகிறது. இதன் மூலம் ‘தளபதி 68’ முதல் பாடல் ரெடியாகிவிட்டதாகவும் இந்த பாடலை அனிருத் பாடவுள்ளதாகவும் ரசிகர்கள் உற்சாகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’. இந்த படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் இன்று வெளியாகவுள்ளது.


Related Post

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்க்க வந்த தனுஷ், அனிருத்- திரையரங்கில் இசையமைப்பாளர் செய்த வேலை, வீடியோ

Posted by - August 10, 2023 0
ஜெயிலர் இனி தமிழ் சினிமாவில் 2 வாரங்களுக்கு ஜெயிலர் படம் பற்றி தான் அதிகம் பேசப்படும். காரணம் ரஜினி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் அமோகமான வரவேற்பை…

”ஹிந்தி தெரியாதுனு சொல்லியும் கேக்கல.. அவமானப்படுத்துனாங்க..” ஏர்போர்டில் சித்தார்த்திற்கு நடந்த கொடுமை!

Posted by - December 28, 2022 0
ஆங்கிலத்தில் பேசுமாறு வலியுறுத்தியும் தொடர்ந்து எங்களிடம் இந்தியில் பேசிக்கொண்டு இருந்தனர் – சித்தார்த் மதுரை விமானநிலையத்தில் சி.ஆர்.பி.எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் ஆங்கிலத்தில் பேச சொல்லியும் தொடர்ந்து…

படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Posted by - March 4, 2024 0
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில்…

விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

Posted by - June 27, 2023 0
விஜய் விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *